September 25, 2021

பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடு: பதவி விலகிய ‘தெஹெல்கா’ ஆசிரியர்

இந்திய ஊடகத்துறையில் முன்னணி இடம் பிடித்த ‘தெஹெல்கா’ ஆசிரியர் தருண் தேஜ்பால் பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடாக நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து 6 மாத காலத்துக்கு தான் வகித்து வரும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.தருண் தேஜ்பால் கடிதத்தைத் தொடர்ந்து, ‘தெஹெல்கா’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரி நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் இ-மெயில் மூலம் தருண் தேஜ்பால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளதை தெரிவித்துள்ளார்.
nov 21 - tehalha Tejpal
தெஹெல்கா இதழ்(Tehelka Magazine) அச்சு வடிவம் பெமுன்பு தெஹெல்கா டாட் காம் (Tehelka.com) என்ற இணையப் பக்கமாக இருந்தது. இந்த இரு வடிவங்களுக்கும் ஆசிரியர் தருண் தேஜ்பால் (Tarun Tejpal) என்ற ஊடகவியலாளர்தான். அவர் இவற்றை ஆரம்பிக்க முன்பு இந்தியா டுடே (India Today) அவுட்லுக் (Outlook) போன்ற இதழ்களில் ப்ரி லேன்சராக பணியாற்றியவர்.

இந்த தெஹெல்கா டாட் காம் வெப்சைட்டை தேஜ்பால் 2000ம் ஆண்டு ஆரம்பித்தார். அது முழுக்க முழுக்கப் புலனாய்வுச் செய்திகளை வழங்கியது. இந்தியாவில் பிறர் வெளிப்படுத்தத் தயங்கிய பல்வேறு ஊழல்களைத் தேஜ்பால் துணிச்சலாக வெளியிட்டார். இதற்காக அவர் பெரும்பாலும் பயன்படுத்திய கருவி கேண்டிட் கேமரா.இதன் மூலம்
அவர் கிரிக்கெட விளையாட்டில் பரவலாக நடக்கும் சூதாட்டத்தை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபித்தார். இந்திய நாட்டின் விளையாட்டு வீரர்கள் சிலர் நாட்டிற்கு வெற்றியைத் தேடிக் கொடுப்பதற்குப் பதிலாக சூதாட்டத்தை நடத்துவோர் கொடுக்கும் பணத்திற்கு தோல்விக்காக விளையாடினார்கள். இதனால் முன்னாள் கப்டன் அசாருதீன் போன்றவர்கள் பெரும் கோடீஸ்வரர்களாக வளர்ந்ததை சுட்டிக் காட்டினார்.

தொடர்து இராணுவத்திற்கு ஆயுத தளபாடங்களைக் கொள்முதல் செய்யும் உயர்மட்ட அதிகாரிகள் பெற்றுக் கொண்ட லஞ்ச விவரங்களைக் கையும் மெய்யுமாகப் படம் பிடித்துக் காட்டினார். இதன் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக நேர்ந்தது.பின்னர் அரசு கொடுத்த நெருக்கடியை எதிர்த்து போராடமுடியாமல் அவர் தெஹெல்கா இணையதளத்தை நிறுத்தினார். ஆனால் அவர் சும்மா இருக்கவில்லை.
2004ம் ஆண்டு நண்பர்ர்களின் நிதி உதவியோடு தெஹெல்கா செய்திச் சஞ்சிகையை ஆரம்பித்தார். அது அச்சுப் பிரதியாக இன்று வரை தனி முத்திரை பெறுகிறது.

2004 தொடங்கி இன்று வரை வெளிவரும் முக்கிய ஊழல்களை (Exposures) இந்த தெஹெல்கா அம்பலப்படுத்தி வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் பழங்குடி மக்களுக்கு எதிராக அரசு நடத்தும் போர், மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற தலைப்பில் நில அபகரிப்பு மற்றும்; தேசிய வளங்கள் சூறையாடுதல் ஆகியவற்றை தெஹெல்கா ஆதாரத்துடன் பதிவு செய்கிறது. மொத்தத்தில் அரசும் அரசுக்கு நெருக்கமானவர்களும் நடத்தும் ஊழல் இத்யாதிகளை வெளிப்படுத்திய சிறப்பு அதற்கு உண்டு.

இந்நிலையில்தான் இந்த இதழின் சார்பாக கோவாவில் நடைபெற்ற விழா ஒன்றில் சக பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு தருண் தேஜ்பால் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.இந்த விவகாரம் குறித்து டெஹல்கா நிர்வாகத்துக்கு அப்பெண் பத்திரிகையாளர் புகார் தெரிவித்திருந்தார். தருண் தேஜ்பாலின் மகள் வயதிருக்கும் தம்மிடம் மிக மோசமாக நடந்து கொண்டதாக அப்பெண் பத்திரிகையாளர் குமுறியிருக்கிறார். எத்தனையோ முறை தருண் தேஜ்பால் தொந்தரவு கொடுத்தும் அதற்கு உடன்பட மறுத்த நிலையில் தொடர்ந்து தொந்தரவு செய்தார் என்பது அப்பெண்ணின் புகார்.இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்ற நிலையில் தருண் தேஜ்பால் 6 மாத காலத்துக்கு தான் வகித்து வரும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் பெண் பத்திரிகையாளரிடம் முறைகேடாக நடந்ததை ஒப்புக் கொண்டுள்ள தருண் தேஜ்பால், இது தொடர்பாக பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சவுத்ரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ளக் கடிதத்தில், “கடந்த சில நாட்கள் மிகவும் சோதனை நிறைந்த காலகட்டமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு நானே பொறுப்பு. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டு விட்டேன். இருந்தாலும், பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று என் மனம் நிர்பந்திப்பதால் பதவி விலகுகிறேன்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரோ, தருண் தேஜ்பால் தம்மை காப்பாற்றிக் கொள்ளவே இப்படி பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். உடனடியாக டெஹல்கா நிர்வாகம் ஒரு கமிட்டியை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று விவகாரத்தை இன்னும் சூடு பறக்கக வைத்துள்ளார்.

Tehelka editor Tarun Tejpal accused of sexual assault; steps aside

******************************************************************************
Tarun Tejpal, editor of investigative magazine, Tehelka has decided to temporarily step down from his role after allegations of misconduct against him by a colleague.
Tejpal will be stepping down for six months, while Shoma Chaudhary, managing editor at Tehelka, will take charge at the helm.