September 20, 2021

பெண் படைப்பாளர்களுக்கு ’அம்மா இலக்கிய விருது’! -ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார்.அதில் அவர், “’எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற பாவேந்தரின் வரிகளுக்கேற்ப தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு எனது தலைமை யிலான அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த நான் காண்டுகளில் தமிழ் வளர்க்கும் பணிகளுக்காகப் பல திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தால் ஆஸ்திரேலியாவில் அடிலேய்டு நகரில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
jaya award sep 29
கடந்த நான்கு ஆண்டு களில், தமிழ் வளர்த்த சான் றோர்களுக்கு, கபிலர், உ.வே.சா, கம்பர், சொல்லின் செல்வர், உமறுப் புலவர், ஜி.யு.போப், இளங்கோவடி கள் ஆகியோர் பெயர்களில் புதிய விருதுகளும் மேலும் தமிழ்த் தாய் விருது, கணினித் தமிழ் விருது, மற்றும் தமிழ்ச் செம்மல் விருது ஆகிய விருதுகளும் ஏற்படுத்தப்பட்டு அந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பின் வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ‘பெண்கள் அறிவை வளர்த்தால்-வையம் பேதைமை யற்றிடும் காணீர்!’-என்ற பாரதியாரின் அமுத மொழிக்கேற்ப, பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், நடப்பாண்டு முதல் மகளிர் இலக்கி யங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ’அம்மா இலக்கிய விருது’ என்ற புதிய விருது சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு நாளில் வழங்கப்படும். ’அம்மா இலக்கிய விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பண முடிப்பும், தகுதியுரையும் வழங்கப்படும்” என்றார்