September 24, 2021

பெண்களுக்கான வயாகரா!

பெரும்பாலும் 30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது. 40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது
woman sex tab jun 5
இதையெல்லாம் ஆராய்ந்து ஆண்களுக்கான பாலின எழுச்சியை தூண்ட உதவும் ‘வயாகரா’ மாத்திரையைப்போல் பெண்களின் எழுச்சிநிலைய அதிகரிக்கச் செய்யும் பிலிபாசெரின் (Flibanserin) என்ற மாத்திரைகள் ஏற்கனவே வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. எனினும், மாதவிடாய் தொடர்பான கோளாறுகள் மற்றும் வேறுசில குறைபாடுகளுக்கு மட்டுமே இவ்வகை மாத்திரைகள் நிவாரணம் அளித்து வருகின்றன.

இந்நிலையில், சுத்தமாக தாம்பத்திய சுகத்தையே வெறுக்கக்கூடிய குறைபாடு (Hypoactive Sexual Desire Disorder) கொண்ட பெண்களுக்கு இல்லற வாழ்வில் ஊக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய மாத்திரையை விற்பனை செய்ய ஒரு மருந்து கம்பெனி அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் மனரீதியான கோளாறுகள் மற்றும் மூப்பு சார்ந்த நோய் அறிகுறிகளால் தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் குறைந்து காணப்படும் பெண்களின் இச்சையை தூண்டி அவர்களை மனமகிழ்வான வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்க உதவும் புதிய மருந்தினை தயாரிக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது என்று தெரிய வருகிறது.