September 29, 2021

பெண்களின் ஸ்விம்மிங் டிரஸ்ஸில் விநாயகர் படம்! – இந்துக்கள் கண்டனம்!

அமெரிக்காவிலுள்ள ஒரு பீர் பாட்டிலில் இந்துக் கடவ்ய்ள்களின் படத்தை போட்டு சர்ச்சைக் கிளப்பிய சம்பவம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனம், பெண்கள் அணியும் நீச்சல் உடை மற்றும் வாட்டர் போலோ உடைகளில் இந்து கடவுள்: விநாயகர் படத்தை பிரிண்ட் செய்து விற்பனை செய்து வருகிறது.இது குறித்து உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளனர். இந்த நீச்சல் உடை விற்பனையை அந்த நிறுவனம் உடனே நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி, இந்து கடவுளை இழிவுபடுத்தும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
swing pilliyar
இது குறித்து ச்ர்வதேச இந்து சமுதாய அமைப்பின தலைவர் ராஜன் ஜெட் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வாட்டர் போலோ மற்றும் நீச்சல் உடைகளில் கணேச பெருமானின் உருவம் பொறித்திருப்பது வேதனைக்குரியது. வணக்கத்திற்குரிய ஒரு கடவுளின் உருவத்தை பெண்களின் உடைகளில் பொறித்து விற்பது மிகவும் தவறு. இந்த நிறுவனம் உடனடியாக இத்தகைய உடைகளை தயாரிப்பதை நிறுத்துவதோடு, விற்பனைக்காக கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆடைகளையும் திரும்ப பெற வேண்டாம். இந்து மக்களிடம் பகிரங்க வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.