September 23, 2021

பெட்ரோல் விலை 96 காசு -டீசல் விலை 91 காசு கம்மி!

மாதந்தோறும் 1 மற்றும் 16–ந் தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றியமைக்கப்படுகிறது. இதன்படி, சென்னையில் இதுவரை ரூ.67.01-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இனி 96 காசுகள் குறைந்து ரூ.66.05-க்கு விற்பனையாகும். இதேபோல், ரூ.56.84-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல், இனி 91 காசுகள் குறைந்து ரூ.55.93-க்கு விற்பனையாகும்.
Oil-Price-Fall-
நாடு தழுவிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு முறையே 91 பைசா மற்றும் 84 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை குறைப்பை அறிவித்துள்ளன.

உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, இந்த விலை குறைப்பு மாறுபடும். அதன்படி, சென்னையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 96 பைசாவும், டீசல் விலை 91 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

நகரவாரியாக பெட்ரோல் விலைக் குறைப்பு விவரம்:

சென்னையில் லிட்டர் ரூ.67.01 என்பது 96 பைசா குறைந்து லிட்டர் ரூ.66.05 ஆகிறது.

டெல்லியில் லிட்டர் ரூ.64.24 என்பது 91 பைசா குறைந்து லிட்டர் ரூ.63.33 ஆகிறது.

கொல்கத்தாவில் ரூ.72.21 என்பது 95 பைசா குறைந்து லிட்டர் ரூ.70.73 ஆகிறது.

மும்பையில் ரூ.71.91 என்பது 96 பைசா குறைந்து ரூ.70.95 ஆகிறது.

டீசல் விலைக் குறைப்பு விவரம்:

சென்னையில் லிட்டர் விலை ரூ.56.84 ஆக இருந்தது 91 பைசா குறைந்து ரூ.55.93 ஆகிறது.

டெல்லியில் ரூ.53.35 ஆக இருந்த விலை 84 பைசா குறைந்து ரூ.52.51 ஆகிறது.

கொல்கத்தாவில் ரூ.57.95 ஆக இருந்த விலை லிட்டருக்கு 87 பைசா குறைந்து ரூ.57.08 ஆகிறது.

மும்பையில் ரூ.61.04 ஆக இருந்த விலை லிட்டருக்கு 93 பைசா குறைந்து ரூ.60.11 ஆகிறது.