October 16, 2021

பெங்களூர் டூ சென்னை: ஜெ. ரிட்டர்ன்

பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் ஜெயலலிதா. அவரை வரவேற்கும் வகையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அவரது வருகையை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவரை காண்பதற்காக பலத்த மழையிலும் திரண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெயலலிதா காரில் போயஸ் கார்டனுக்கு வந்து சேர்ந்தார். அ.தி.மு.க. தொண்டர்கள் வழிநெடுகிலும் பலத்த மழை பெய்த நிலையிலும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொண்டர்கள் அவரது வருகையை தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
jaya -oct 18
இது தொடர்பான அப்டூ டேட் செய்திப் பதிவுகள் இதோ…

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இன்று காலை   நீதிபதி குன்ஹாவிடம்  ஜாமீன் உத்தரவு வழங்கபட்டது.  ஜெயலலிதாவுக்காக பரத் மற்றும் குணஜோதி ஆகிய இருவர் பிணையம் அளித்தனர். இதன்பிறகு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் பிணையம் அளித்தவர்களிடமிருந்து ரூ.1 கோடி பாண்ட் எழுதி வாங்கிக்கொண்டு ஜாமீனில் விடுதலை செய்ய அனுமதிக்குமாறு கோர்ட் ரிஜிஸ்டருக்கு குன்ஹா உத்தரவிட்டார். மேலும், ஜெயலலிதா உள்பட 4 பேரிடம் இருந்து , தலா ரூ.1 கோடி பாண்ட் எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஜெயில் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து ஜாமீன் நடை முறை முடிந்த பின் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் ஜாமீன்ல் விடுதலை செய்ய நீதிபதி குன்ஹா அதிகாரபூர்வமாக உத்தரவிட்டார். இதை தொடர்ந்து. இந்த உத்தரவு சிறை துறை அதிகாரிகளிடம் சமர்பிக்கப்பட்டது.  இதையடுத்து  ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வந்தார்.

 
2.45 PM: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |

3.15 PM: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியேறினார்.

3.20 PM: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

3.45 PM: பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து வெளியேவரும் ஜெயலலிதாவை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.கள், மேயர்கள் உள்பட 500-க்கு மேற்பட்டோர் சுமார் 4 மணி நேரம் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.

4.10 PM: பெங்களூர் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் ஜெயலலிதா.
jaya oct 18

4.40 PM: 21 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சென்னை திரும்பும் ஜெயலலிதாவை வரவேற்க விமான நிலையம் முதல் போயஸ் கார்டன் வரை அதிமுகவினர் மனிதச் சங்கிலியாக மழையை பொருட்படுத்தாமலும் காத்திருந்தனர்.

5.43 PM: கோட்டூர்புரம் விநாயகர் கோயில் வழியாக வந்த ஜெயலலிதாவின் கார் ஒரு சில நொடிகள் கோயில் முன் நிறுத்தப்பட்டது. ஜெயலலிதா காரில் இருந்தவாறே சாமி தரிசனம் செய்து கொண்டார்.

6.00 PM: விமான நிலையத்தில் இருந்து பொதுமக்கள் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தடைந்தார்.