October 16, 2021

பூமித்தாயின் மீதான சுமையை கொறைங்கப்பூ! – பாரீஸ் மாநாட்டில் மோடி பேச்சு

பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உச்சி மாநாடு, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. அதில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டுள்ளார். மாநாட்டு அரங்கில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர் பான இந்தியாவின் கண்காட்சி கூடத்தை மோடி நேற்று திறந்துவைத்தார். கூடத்தை சுற்றிப்பார்த்த அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். அவருடன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்து கொண்டார்.
modi-un-759
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசும் போது, “பருவநிலை மாற்றம் என்பது உலகளாவிய பெரும் சவால். அதற்கு நாம் காரணம் அல்ல. இந்த மாநாட்டின் பலன் மிகவும் முக்கியமானது. உலக நாடுகள் விரைந்து செயல்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த இந்த மாநாட்டில், விரிவான, நேர்மையான நீடித்த ஒரு ஒப்பந்தம் உருவாக வேண்டும்.உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வாழ்க்கை முறை யும் மாற வேண்டும். அப்படி மாறினால்தான், பூமித்தாயின் மீதான சுமையை குறைக்க முடியும். நாம் எப்படி வாழ்கிறோம், சிந்திக்கிறோம் என்பதை சார்ந்துதான், நமது முயற்சிகளின் நீடித்த வெற்றி இருக்கிறது. ஒரு சிலரின் வாழ்க்கை முறையால், வளரும் நாடுகளின் வாய்ப்புகளை நசுக்குவது சரியல்ல.பருவநிலை மாற்றத்தை கட்டு ப்படுத்துவதில் நாம் முன்னணியில் இருக்க வேண்டும். கார்பன் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து உறுதி மேற்கொள்வோம்”என்று கூறினார்.
1448890615-4725
முன்னதாக பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் மோடி தன் உரையின் போதுன், “பருவநிலை மாற்றம் உலகத்திற்கு மிகவும் சவாலாக உள்ளது.

பருவநிலை மாற்றத்தின் கடும் விளைவுகளை வளரும் நாடுகள் சந்திக்கிறது.

பருவநிலை மாற்றத்தின் விளைவை நாங்கள் இந்தியாவில் உணர்கிறோம்.

நாம் மனிதஇனம் மற்றும் இயற்கை இடையிலான சமநிலை மீட்க வேண்டும்.

இங்கு உலகநாடுகள் எடுக்கும் தேர்வானது, எங்களுடைய வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவில் எப்போதுமே இயற்கையானது, தாயுடன் ஒப்பிடப்படுகிறது.

உலக நாடுகள் விரைந்து செயல்படவேண்டும் என்று விரும்புகிறோம்.

நமது நடவடிக்கைகள் எதிர்கால சந்ததியினரை காப்பதாக இருக்கவேண்டும்.

பருவநிலை மாற்றத்தில் தீர்வு காணுவதில் இந்தியா முன்னால் நிற்கவேண்டும்.

பருவநிலை மாற்றம் விவகாரத்தில் பாரீசில் நடுநிலையான மற்றும் நீடித்த ஒப்பந்தமானது ஏற்படவேண்டும்.

மகாத்மா காந்தியிடம் இருந்து இதனை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். எல்லோருடைய தேவைக்கானது உலகம், யாருடைய பேராசைக்கானது கிடையாது.

பாதுகாப்பு இயற்கையாகவே எங்களுடன் வருகிறது.

நமது காலமற்ற பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளில் இருந்து எழுகிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கொள்வதற்கானதாக நமது அர்ப்பணிப்பு இருக்கவேண்டும்.

2030-ம் ஆண்டுக்குள் 40 சதவிதம் நம்முடைய எரிசக்தி தேவையானது புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் சந்திக்கவேண்டும்.

‘பருவநிலை மாற்றம் எங்களுடைய தவறு கிடையாது’ என்று குறிப்பிட்டார்ர்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாகவே பிரிட்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் பருவநிலை மாறுபாட்டுக்கு எதிரான அனைத்து சுமைகளையும் வளரும் நாடுகள் மீது சுமத்தக்கூடாது என்று தெளிவாக தெரிவித்து இருந்தார். தற்போது அறிவியல் வளர்ந்து விட்டது, மாற்று எரிசக்திகள் கிடைத்து வரும்நிலையில், சில நாடுகள் வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைவரின் பங்கும் சமமானதே என ஏற்கெனவே பயன்பெற்று வளம்பெற்று விட்ட நாடுகள் கூறுகின்றன. இவ்விவகாரத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், வளர்ந்த நாடுகளுக்கு கூடுதல் பொறுப்புணர்வு உள்ளது. தொழில்நுட்பம் இருக்கிறது என்பதால் மட்டுமே அது அனைவருக்கும் கிடைக்கும், மிக மலிவானது என்று கூறிவிட முடியாது.

குறைந்த அளவு கார்பனை நாம் பாதுகாப்பாக எரிக்க வேண்டும். அதுதான் நியாயம். வளரும் நாடுகள் வளர்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே நீதி ஆகும். மிகச் சிலரின் வளர்ச்சியுற்ற வாழ்க்கை முறை, தற்போதுதான் வளர்ச்சிப்படியில் முதல் அடி எடுத்து வைத்திருக்கும் பலரின் வாய்ப்புகளை பறித்து விடக்கூடாது என்று தெரிவித்து இருந்தார்.