October 25, 2021

”புறம்போக்கு” பற்றி இயக்குநர் ஜனநாதனின் அப்டேட் பேட்டி!

ஆர்யா, விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் ‘புறம்போக்கு’ என்ற படத்தை இயக்கி வரும் எஸ்,பி. ஜனநாதனிடம்,.படத்தின் தலைப்பு ஒரு மாதிரியாய் இருக்கிறதே…? என, ” அட.,’புறம்போக்கு’ என்ற வார்த்தைப் பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளது. ஆனால், இந்தச் சொல் ஆழமான, வரலாற்று ரீதியான பொருள் கொண்டதாக்கும். அதிலும் வாழ்வியலின் அடிப்படையான கருத்தை உள்ளடக்கியது. உண்மையில் ‘புறம்போக்கு’ என்றால் ‘பொதுச்சொத்து’ என்று பொருள். ஊரில் குடியிருப்பு தவிர்த்து பொதுத்தேவைக்கான நிலங்களை ஏரி புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு, மந்தை வெளி புறம்போக்கு என 15 வகைகளாகப் பிரித்து வைத்தனர். மக்கள் தொகை பெருகியதும், குடியிருக்க வீடுகள் கட்ட நத்தம் புறம்போக்கு என்று விட்டு வைத்தனர். பொதுச்சாலை, பேருந்து நிலையம், பள்ளி, மருத்துவமனை கட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டது புறம்போக்கு நிலங்களில்தான்.அப்படி மக்கள் தேவைக்காக இருந்த பொது இடமான புறம்போக்கு நிலங்கள், இன்று மெல்ல மெல்ல தனியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகின்றன. அதைப்பற்றிய பின்னணியைக் கொண்ட சிந்தனைதான் இந்தப் படம். ]
purampokku 1
மேலும் இந்தப் படத்தைப் பற்றி சொல்வதென்றால் சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல.. நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறை சாலையில் தான் அரங்கு ஏறி உள்ளது. மகாத்மா காந்தி , நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் சிறைசாலையில் இருந்து தான் தங்களது வெற்றி சரித்தரத்தை துவங்கினர். சிறை சாலை என் படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரமாகவே இருந்து உள்ளது என்றால் மிகை ஆகாது.என் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் நமது சரித்திரத்தில் இருந்து எடுக்க பட்டது தான்.
purampokku 2
சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூடப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து , பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலின் பெயர் கார்த்திகாவுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுக படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுக படுத்தியவருமான மெக்கலே வின் பெயர் ஷ்யாமுக்கும், மிகவும் வித்தியாசமான யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதா பாத்திரத்துக்கு யமலிங்கம் என்று பெயர் சூட்ட பட்டு உள்ளது.” என்றார்