September 23, 2021

புத்தாண்டு முதல் ஷேவிங் – ரூ.50:கட்டிங்- ரூ.100!,

சவரம் செய்யும் கடைகளின் வாடகை அதிகரித்துவிட்டதால் வரும் ஜனவரி மாதம் முதல் முடிவெட்டுதல், முகச் சவரம் செய்தல் ஆகியவற்றின் கட்டணம் முறையே ரூ 100 மற்றும் ரூ 50-ஆக உயர்த்தப்படும் என தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
nov 29 -Barber who owns 3.1 cr Rolls Royce.
இது குறித்து தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெளியான அறிக்கையில்,”சமீப காலமாக சவரம் செய்யும் கடைகளின் வாடகை அதிகரித்து விட்டதால் முடிதிருத்தும் கட்டணம் ஜனவரி 2014 முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி பெரியவர்களுக்கு முடிவெட்டு வதற்கு சாதாரணக் கட்டணம் ரூ.100 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.150 ஆகவும் உயர்த்தப்படுகின்றன‌. அதேபோல முகச்சவரம் செய்வதற்கு சாதாரண கட்டணம் ரூ.50 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.80 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.

மேலும் சிறுவர்களுக்கு முடிவெட்டும் சாதாரண கட்டணம் ரூ.80 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.120 ஆகவும் உயர்த்தப்படுகின்றன. சிறுமிகளுக்கு முடிவெட்ட சாதாரணக் கட்டணம் ரூ.100 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.200 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இவை தவிர, முடி கருப்பாக்குவதற்கு சாதாரண கட்டணம் ரூ.150 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.200 ஆகவும் மற்றும் ஹேர் கலரிங் செய்ய சாதாரண கட்டணம் ரூ.200 ஆகவும், ஏ.சி. கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்படுகின்றன.

இது உங்கள் பார்வைக்கு::http://www.youtube.com/watch?v=Bk-1nDFUxIg