September 27, 2021

புதுச்சேரி பூச்சிக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சிலின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் பூச்சிக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிலையத்தில் (Vector Control Research Centre) உள்ள காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
job jan 8
பணியிட விவரம்:

1. லோயர் டிவிசன் கிளார்க்: 

5 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1).

சம்பளம்: 

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் அல்லது இந்தியில் 25 வார்த்தைகளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 

12.1.2015 தேதிப்படி 18 லிருந்து 27க்குள்.

2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 

5 இடங்கள்.

சம்பளம்: 

ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள்.

வயது: 

12.1.2015 தேதிப்படி 30க்குள்.

பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள்:

புள்ளியியல்: 

1 (பொது):

தகுதி: 

புள்ளியியல் பாடத்தில் 3 வருட பட்டப்படிப்பு அல்லது புள்ளியியலை ஒரு பாடமாகக் கொண்டு கணிதத்தில் பட்டப்படிப்பு. மேலும் கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் ஒரு வருட டிப்ளமோ/சான்றிதழ் படிப்பு.

கம்ப்யூட்டர் அப்ளிகேசன்: 

1 இடம் (பொது- மாற்றுத்திறனாளி)

தகுதி: 

கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் 3 வருட பட்டப்படிப்புடன் நெட்ஒர்க்கிங்/வெப்சைட் டெவலப்மென்ட் கோர்சில் ஒரு வருட டிப்ளமோ/சான்றிதழ் கோர்ஸ் அல்லது ஒரு வருட பணி அனுபவம்.

உயிர் அறிவியல்: 

2 இடங்கள் (எஸ்டி-1, ஒபிசி-1).

தகுதி: 

உயிர் அறிவியல் பாடத் தில் 3 வருட பட்டப்படிப்புடன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி பிரிவில் ஒரு வருட டிப்ளமோ/சான்றிதழ் கோர்ஸ்.

வேதியியல்:

1 இடம் (பொது).

தகுதி: 

வேதியியல் பாடத்தில் 3 வருட பட்டப் படிப் புடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் ஒரு வருட டிப்ளமோ/சான்றிதழ் படிப்பு

3. டெக்னீசியன்-சி : 

7 இடங்கள் (பொது-4, எஸ்சி-1, ஒபிசி-2).

சம்பளம்: 

ரூ.5,200-20,200 மற் றும் தர ஊதியம் ரூ.2,800 மற்றும் இதர சலுகைகள்.

தகுதி: 

அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2வுடன் Medical Laboratory Technology/Sanitation/Public Health Science பிரிவில் ஒரு வருட டிப்ளமோ/சான்றிதழ் கோர்ஸ் முடித்திருப்பதோடு ஒரு வருட பணி அனுபவம் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்தபின் Medical Laboratory Technology DMLT) / sanitation/Public Health Science பிரிவில் 2 வருட டிப்ளமோ..

வயது: 

12.1.2015 தேதிப்படி 30க்குள்.

4. டெக்னீசியன்- ஏ:

5 இடங்கள் (பொது-3, எஸ்டி-1, ஒபிசி-1). (பொதுப்பிரி வில் உள்ள 3 காலியிடங்களில் ஓரிடம் மாற்றுத்திறனாளி களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.)

சம்பளம்: 

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மருத்துவ ஆய்வக தொழில் நுட்பத்தில் (சிவிலிஜி ஒரு வருட சான்றிதழ் படிப்பு அல்லது ஆய்வகத்தில் ஒரு வருட பணி அனுபவம்.

வயது:

12.1.2015 தேதிப்படி 28க்குள்.

விண்ணப்ப கட்டணம்: 

ரூ.100/- இதை The Director, Vector Control Research Centre, Puducherry என்ற பெயரில் புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.vcrc.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
12.1.2015.