October 24, 2021

புதுச்சேரியில் போட் ஹவுஸ் சர்வீஸ் ரெடி!

புதுச்சேரி ஓர் அழகிய சுற்றுலா தளமாகும். ஆன்மீகம் மற்றும் அழகான கடற்கரை மற்றும் உப்பங் கழிகள் புதுச்சேரி சுற்றுலாவின் சிறப்பு அம்சங்களாகும்.கடந்த ஆண்டு வாசிக்கப்பட்ட பொது பட்ஜெட் உரையில் புதுச்சேரி சுற்றுலாவினை மேம்படுத்த நோனாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகு வீடு அறிமுகப் படுத்தப் படும் என்று முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் புதுச் சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம் மந்த்ராபோட் ஹவுஸ் பிரைவெட் லிமிட்டெட் என்ற படகு வீடு தயாரிக் கும் நிறுவனத் துடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. அவ்வொப்பந்தத்தின்ப டி மந்த்ரா போட் ஹவுஸ் சுண்ணாம்பாற்றில் படகு வீடு கட்டும் பணியினை தொடங்கியது. மேற்படி படகு வீடு கட்டும் அனைத்து செலவினத்தையும் மந்த்ராபோட் ஹவுஸ் ஏற்றுக் கொண்டது. புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிகழகம் படகு வீடு அமைக்க சுண்ணாம்பாற்றின் கரையில் இடம் ஒதுக்கி கொடுத்ததுடன் சுற்றுலா பயணியர்கள் தங்கி படகு வீடுயில் பயணம் செய்ய ஏதுவாக 2400 சதுரஅடிகள் கொண்ட நிலப் பரப்பை யும் ஓதுக்கீடு செய்துள்ளது. தற்போது படகுவீட்டின் பணிகள் நிறைவு பெற்றுவரும் 28-01-2016ல் முதல்வர் படகு வீட்டின் முதல் ஓட்டத்தினை தொடங்கி வைப்பார்.
pondy boat jan 21
இது பற்றி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, “இப் படகு வீடு இரண்டு தளங்களை கொண்டது. முழுவதும் இயற்கையை ஒட்டி வடிவமைக்கப் பட்டது. இப்படகு வீட்டில் உணவருந்தும் பகுதி ஒன்று, சமையல் கூடம் மற்றும் கழிவறையுடன் உள்ள குளிரூட்டப்பட்ட அறைகள் மூன்று ஆகியவை கீழ் தளத்திலும் கருந்தரங்கம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக இடவசதியுடன் மேல் தளமும் உள்ளது. மேலும் சுற்றுலா பயணியர்களின் வசதிக்காக தூய்மைப் படுத்தப்பட்ட குடி தண்ணீர், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி,அழகிய இருக்கைகள் இப்படகு வீட்டில் உண்டு. இப் படகில் பயணம் செய்ய 24 மணி நேரத்திற்கு ஒரு அறைக்கு இரு நபர்களுக்கு உணவு உள்பட ரூ.10,000 வசூலிக்கப் படும். சுற்றுலாபயணியர் படகிலிருந்தபடியே இயற்கை அழகை ரசிக்கலாம்.

காலை 11 மணியளவில் ஆரம்பமாகும் அப்பயணத்தின் போது பயணியர்களுக்கு தேநீர் அல்லது பழ ரசம் வழங்கப்படும். இப்படகு பயணம் நண்பகல் 12 மணியளவில் பெரடைஸ் தீவினை எட்டும். அங்கு சுற்றுலா பயணியர்களின் விருப்பத்திற்கேற்ப சைவ மற்றும் அசைவ உணவுகளை படகிலேயே சமைத்து உடனடியாகப் பரிமாறப்படும். உணவு உண்ட பின்னர் சுற்றுலா பயணியர்கள் படகில் ஓய்வு எடுக்கலாம் அல்லது பெரடைஸ் தீவில் பொழுதை கழிக்கலாம். பின்னர் 3 மணிஅளவில் படகு மீண்டும் புறப்பட்டு சுண்ணாம்பாற்றில் நீண்ட தூரம் பயணிக்கும் அப்போது பயணியர்கள் கரைகளில் வளர்ந்துள்ள தென்னை மரங்களின் செழுமையும் மற்றும் இயற்கையின் அழகையும் ரசிக்கலாம்

அதன் பின்னர் மாலை 6 மணியளவில் படகுநங்கூரம் பாய்ச்சப்பட்டு ஆற்றின் நடுவில் நிறுத்தப்படும். பயணியர்கள் படகு வீட்டிலேயே பொழுதை இனிமையாக கழித்து இரவு உணவிற்கு பின்னர் குளிரூட் டப்பட்ட அறையில் ஆனந்தமாக உறக்கலாம். மறுநாள் காலை 6 மணியளவில் சூரிய உதயத்தை காணலாம்.பின்னர் காலை சிற்றுண்டி படகில் பரிமாறப்படும்.அதன் பின்னர் படகு பயணம் ஆரம்பமான இடத்திற்கு வந்து சேரும். இப்படகு பயணத்தின் போது சுற்றுலா பயணியருக்கு எவ்வித அசெளா pயங்களும் ஏற்படாத வண்ணம் அவர்களின் பாதுகாப்பான மற்றும் மனநிறைவான பயணத்தி னை நிறுவனம் உறுதி செய்கிறது. தீயணைப்பு கருவிகள்,பாதுகாப்பு உடைகள்,உயிர் காக்கும் பயிற்சி பெற்ற உதவியாளர்கள்,மருத்துவ வசதிகள் இப்படகு வீட்டில் செய்யப்பட்டுள்ளன.

இப்படகு வீட்டின் மூலம் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிகழகத்திற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.20,000-மும் அல்லது படகு வீட்டின் அறைகள் மாதம் முழுவதும் முழுமையாக நிறையப் பெற்றால் ரூ.45,000-மும் கிடைக்கும்.படகு வீடு புதுச்சேரி சுற்றுலா வரலாற்றில் ஒருமைல் கல்லாக விளங்கும் என்பதில் ஐயமில்லை”” என்றார்.