September 18, 2021

புதிய புயல் ‘லெஹர்’ – அந்தமான் அருகே உருவானது

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தெற்கு அந்தமான் கடலில் சென்னையில் இருந்து 1500 கிலோ மீட்டருக்கு அப்பால் மையம் கொண்டுள்ள இதற்கு ‘லெஹர்’ என பெயரிடப்பட்டுள்ளது..
nov 24 - weather
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள தகவல் குறிப்பில், ”அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளது. அந்த புயலுக்கு இந்தியா பரித்துரைத்தபடி ‘லெஹர்’ என பெயரிடப்பட்டுள்ளது. அந்தமானின் போர்ட் பிளேரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் லெஹர் புயல் மையம் கொண்டுள்ளது. அந்தமானின் போர்ட் பிளேரை லெஹர் புயல் 28ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடக்கும்.

புயல் கரையை கடக்கும்போது அந்ததமானில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். தீவிர புயலாக வலுப்பெற்று வரும் லெஹர் புயல் மேற்கு-வடக்மேற்காக நகர்ந்து, ஆந்திராவை நோக்கி செல்லும். புயல் உருவானதையடுத்து, அடுத்த 48 மணி நேரத்திற்கு அந்தமானில் கனமழை பெய்யும். புயல் கரையை கடக்கும் போது அந்தமானில் மரங்கள், குடிசை வீடுகள் சேதமடைய வாய்ப்பு உள்ளது.புதிய லெஹர் உருவாகியிருப்பதைத் தொடர்ந்து அந்தமானில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை அதிகாலையில் புயல் எச்சரிக்கை கூண்டு1 ஆம் எண் ஏற்றப்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால் மாலையில் 12 மணிக்கு மேல் புயல் எச்சரிக்கை கூண்டு 2 ஆம் எண் ஏற்றப்பட்டு மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வோண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலோரப்பகுதியில் வசிக்கும் , மீனவர்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க பாம்பன் துறைமுக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.