September 29, 2021

பீர்குடிப்பதற்கான வயது வரம்பு 21 ஆக குறைப்பு – டெல்லி முடிவு !

இந்தியாவில் தற்போது பள்ளி,கல்லூரிகளின் மாணவ,மாணவிகளில் 79சதவீதத்தினர் வெளிநாட்டு கலாசாரத்துக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். பணத்தின் மதிப்பை அறியாமல் இவ்வாறு நாகரீகம் வளர வளர கலாசார சீரழிவுகளும் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது.- பெற்றோர்கள் எத்தனையோ இடர்களுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்க வைத்து கல்லூரி வரைக்கும் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் சில பெண்கள் கல்லூரியில் விடுதிகளில் மட்டுமின்றி பொது வெளியிலேயே பியர் குடித்து கும்மாளம் அடிக்கும் ஒரு வீடியோ அடிக்கடி முகப்புத்தகத்தில் பரவுகிறது.
beer law
இந்நிலையில் டெல்லியில் மதுகுடிப்பவர்களுக்கான வயதுவரம்பு தற்போது 25 ஆக உள்ளது. தற்போது இளைஞர்கள் பீர்குடிப்பதற்கான வயது வரம்பினை 21 ஆக குறைப்பது தொடர்பாக திட்டம் தயார் ஆகிவருகிறது. கலால்துறையின் இந்த திட்டமானது அரசிடம் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரியவந்து உள்ளது. விரைவில் இந்த திட்டமானது அமைச்சரவையின் முன் வைக்கப்படும் என்றும் புதிய வயதுவரம்பு மாற்றம் என்பது ஒயின் மற்றும் பீர்-க்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கது அனாள் ரம், ஜின், விஸ்கி மற்றும் ஓட்கா ஆகிய மதுபானங்கள் குடிப்பதற்கான வயதுவரம்பு 25 ஆகவே நீடிக்கும் என்றும் பரிந்துரையாகி உள்ளது.

மராட்டிய மாநிலம் மும்பையில் இளைஞர்கள் பீர் வாங்கி, குடிப்பதற்கான வயது 21 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே பிறமாநிலங்கள் போன்று டெல்லியிலும் வயதுவரம்பினை குறைக்க கலால்துறை தயார் ஆகிவருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது என்றால், வரும் சட்டமன்றத் தொடரில் மசோதா தாக்கல்செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளது.