September 29, 2021

“பிளேபாய் இதழில் நிர்வாண படங்கள் பிரசுரிக்க போவதில்லை!- – இதழின் நிர்வாகம் முடிவு!

அமெரிக்காவில் இருந்து பப்ளிஷ் ஆகும் பிரபல மாத இதழ் “பிளே பாய்’. இந்த புத்தகத்தில் பக்கத்துக்குப் பக்கம் நடிகைகளின் நிர்வாணப் படங்கள் தவறாமல் இடம் பெறும். இதில் வெளி யாகும் படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.பிளேபாய் இதழில் உலகப் புகழ்பெற்ற நடிகைகள், மாடல் அழகிகளின் கவர்ச்சிப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.இந்த பத்திரிகைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனி டையே பிளேபாய் இதழில் நிர்வாண படங்கள் பிரசுரிக்க போவது இல்லை என அந்த இதழின் நிர்வாகம் முடிவு எடுத்து உள்ளது.
play boy oct 13
”பிளேபாய்” இந்த வார்த்தையை உபயோகிக்காத இளசுகளோ, பெரிசுகளோ கிடையாது. முழு நிர்வாணப் படங்களுககுப் புகழ் பெற்ற பிளேபாய் பத்திரிக்கையை ஆரம்மித்தவர் ஹயூச் ஹெஃப்னர். இவருடைய அம்மா ஒரு ஆசிரியை. டீச்சர் பிள்ளை மக்கு என்ற பொன்மொழிக்கு மிகப் பொருத்தமாக இருந்தார் ஹயூச். ஹயூச் பள்ளிக் கூடத்தில் சரியான மக்கு என்று பெய ரெடுத்தான். ஆசிரியையான தன்னுடைய குழந்தை மக்காக இருக்கிறானே என வருந்தினார் அவன் அம்மா. பிறகு ஒரு உளவியல் நிபுணரிடம் கொண்டு போய் சோதித்தார்.

ஹஃபின் அறிவில் ஆச்சரியமடைந்தார் மனோதத்துவ நிபுனர். “இவன் மிகச் சிறந்த அறிவாளி. தன்னுடைய சொந்த முயற்சியாலேயே முன்னேறிவிடுவான்” என்றார். ஹஃபின் அம்மாவோ பையன் மக்காவே இருக்கிறான் என்றார். “இவனுக்கு படிப்பில் ஆர்வமில்ல. அவ்வளவு தான் மத்த படி, இவன் மந்தமான பையன் அல்ல” என்று பாராட்டினார்.

பெரியவன் ஆனதும் ஹெஃப்னர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா. தன் வீட்டில் இருந்த பர்னீச்சர்களை அடமானம் வைத்து அறுநூறு டாலரை புரட்டினான். அந்த பணத்தில் ஐந்நூறு டாலரை ஒரு ஸ்டூடியோவில் கொடுத்து கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் நிர்வாணப் படங்களை வாங்கினான். அது காலண்டர்களுக்கா நிர்வாணமாய் நடிகை மன்றோ கொடுத்த புகைப்படங்கள். மீதம் இருந்த நூறு டாலரை வைத்து பிளேபாய் முதல் இதழை வெற்றிகரமாக வெளியே கொண்டுவந்தார். 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்க்கெட்டுக்கு வந்தது முதல் பிளேபாய் பத்திரிக்கை. காமத்தில் திளைத்திடும் மக்கள் சில நாட்களியே புத்தகங்கள் அனைத் தையும் வாங்கிப் போனார்கள். இந்த புத்தகங்கள் விற்குமோ, விற்காதோவென பயந்து கொண்டிருந்த ஹெஃப்னருக்கு ஆனந்தமாக இருந்தது.

அடுத்தடுத்து புதிய அழகிகளின் நிர்வாணப் படங்களோடு பிளேபாய் தொடர்ந்துவர ஆரமித்தது. அமெரிக்காவில் தொடங்கிய பயணம். உலகின் கடைக்கோடிவரை “பிளேபாய்” பத்திரிக்கையை அறிய செய்தது. நகைச்சுவை கலந்த செக்ஸ் பத்திரிக்கையாக வந்தாலும் பல குடும்ப பெண்கள், டாக்டர்கள், நடுத்தர வர்க்க மக்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் என எல்லோரும் வாங்கி பெருமைகொள்ளும் அளவிற்கு போனது.

இந்நிலையில் பிளேபாய் நிறுவனர் ஹியூக் ஹெப்னர்(வயது 89) தலைமை செயலதிகாரி ஸ்காட் பிளான்டர்ஸ் ஆகியோர் இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அடுத்த (2016) ஆண்டு மார்ச் மாதம் முதல் முழு நீள (புளோஅப்) நிர்வாணப் படங்கள் பிளேபாய் இதழில் இடம்பெறாது என்ற முடிவை எடுத்துள்ளோம். ஆனால், இந்தமாத அழகி பகுதியும், பெண்களின் கவர்ச்சிப் படங்களும் தொடர்ந்து இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.

1953-ம் ஆண்டு வெளியான பிளேபாய் முதல் இதழின் அட்டைப்படத்தில் அன்றைய ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் படம் இடம்பெற்றிருந்தது. கடந்த 1975-ம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச அளவில் பிளேபாய் இதழின் விற்பனை மாதத்துக்கு சுமார் 50 லட்சம் பிரதிகள் என்ற அளவில் இருந்தது. ஆனால், தற்போது மொத்தமே 8 லட்சம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இன்டர்நெட்டில் நிர்வாணப் படங்களுக்கு பஞ்சமே இல்லை. மவுசை கிளிக்கினால் போதும் இலவசமாகவே ஏகப்பட்ட படங்கள் கிடைக்கிறது. எனவே, நிர்வாணம் என்பது இப்போது மிகவும் சாதாரணமாகி விட்டது. இந்நிலையில், பிளேபாய் பத்திரிகையின் பாணியை மாற்றியமைக்க நிர்வாகமும், ஆசிரியர் குழுவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.