September 29, 2021

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை – ரிபீட்!

இணையதளம் மூலம் பொருள் களை விற்பனை செய்யும் பிளிப்கார்ட் நிறுவனம் ஃபேஷன், லைஃப்ஸ்டைல், வீட்டு உபயோக பொருள்கள், நுகர்வோர் மின்னணு கருவிகள் உள்ளிட்ட பொருள் களை கடந்த 8 ஆண்டுகளாக இந்நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்குவோரில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உள்ள நகரங்களில் பெங்களூரு முதலிடத்திலும், இதையடுத்து டெல்லி, சென்னை, புணே, கோவை, அகமதாபாத் நகரங்கள் வருவதாக தெரியவந்துள்ளது.70 பிரிவுகளில் 3 கோடிக்கும் அதிகமான பொருள்களை இந்நிறுவனம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்கிறது. புத்தகம், நுகர்வோர் மின்னணு சாதனம் உள்ளிட்ட பொருள்களும் இதில் அடங்கும். இந்நிறுவனத்தில் பதிவு பெற்ற பயனாளிகள் எண்ணிக்கை 4.5 கோடியாகும்.
flip oct 1
இந்நிறுவன இணையதளத்தை தினசரி ஒரு கோடி பேர் பார்வையிடுவதாகவும், வர்த்தகர்கள் தங்கள் பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏற்ற வசதியை நிறுவனம் செய்துள்ளதாகவும் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரி சச்சின் பன்சால் கூறினார்.

ஒரு ஆண்டுக்கு 100 கோடி பொருள்களை விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டு தங்கள் நிறுவனம் இயங்கி வருவதாக பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனையை மறக்க முடியாது.ஆயிரக்காணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஒரு ரூபாய், 10 ரூபாய் என மிக குறைந்த விலையில் விற்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல லட்சம் பேர் தங்கள் கணினி முன்பும், செல்போன்களுடனும் தயாராக இருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. எல்லா பொருட்களும் சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிட, வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர். பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பொருள் இல்லை என கையை விரித்தது பிளிப்கார்ட்.இதனால் கடுப்பான வாடிகையாளர்கள் தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்தி அந்த நிறுவனத்தை ஒரு வழியாக்கிவிட்டனர். கடைசியில் நிறுவனர்கள் மன்னிப்பு கேட்க வேண்டியதாகிவிட்டது.

ஆனால், இந்த முறை அப்படி நடக்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு போல் அல்லாமல் இந்த ஆண்டு பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனையை 5 நாட்கள் (அக்டோபர் 13 முதல் 17 வரை) நடத்த திட்டமிட்டுள்ளனர். அதுவும் அவர்களின் செயலி மூலம் மட்டுமே என்று அறிவித்துள்ளது