January 22, 2022

பிலிப் ஹியூஸ்:நினைவு நாள்: கிரிக்கெட் உலகம் மரியாதை!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டு போன வருஷம் இதே நாளில்(நவம்பர் 27)தான் மரணம் அடைந்தார்.இந்த அதிர்ச்சி தந்த ஓராண்டு நிறைவையொட்டி, கிரிக்கெட் உலகம் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது.ஹியூஸின் ஷாக்கான மரணத்துக்குப் பினாடி கிரிக்கெட் டில் பாதுகாப்பு உபகரணங்கள் மேலும் பலப் படுத்தப் பட்டன. தலையின் பின்பகுதியை நன்கு மறைக்கும் புதுவிதமான ஹெல்மெட்டை வீரர்கள் பயன் படுத்த ஆரம்பிச்சிருக்காங்கங்கறது குறிப்பிடத்தக்கது.

criket nov 27

சென்ற வருடம், ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டியில் தெற்கு ஆஸ் திரேலிய அணிக்காக விளையாடி வந்த பிலிப் ஹியூஸ், நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அபாட் வீசிய பவுன்சரை அடித்து ஆட முயன்ற போது படுகாயமடைந்தார். பந்து அவரு டைய இடது கழுத்துப் பகுதியில் பலமாகத் தாக்கியது. இதனால் நிலை குலைந்தவர் மைதானத்தில் சரிந்தவரை. உடனடியாக செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் கோமா நிலை யிலேயே இருந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் சென்ற வருடம் இதே தினத்தில் (நவம்பர் 27) மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகை மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

பிலிப் ஹியூஸின் உடல் அவருடைய சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சி அவர் படித்த மேக்ஸ்வில்லே உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்றபோது, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் உள் ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், ஹியூஸின் நெருங்கிய நண்பருமான மைக்கேல் கிளார்க் புகழஞ்சலி செலுத்தினார். அவரு டைய பேச்சு மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்தது. ‘ஹுயூஸை நான் எப்போதும் தேடுவேன். இது பைத்தியகாரத் தனமாகத் தெரிந்தாலும் அவருடைய தொலைபேசி அழைப்புக்காக நான் எப்போதும் காத்திருப்பேன். அவர் முகத் தைக் காண வும் ஆசைப்படுகிறேன். இதைத்தான் ஆன்மா என்பதா? அப்படியென்றால் அவர் ஆன்மா இன்னமும் என்னிடம் உள்ளது. அது ஒருபோதும் என்னைவிட்டுப் போகாது’ என்றார். பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு நடைபெற்றதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் தங்களது இரங்கலையும், வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டார்கள்.

இதனிடையே பிலிப் ஹியூஸ் மறைந்த தினமான இன்று கிரிக்கெட் உலகம் ஹியூஸை நினைவு கூர்ந்தது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஹியூஸின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். இன்று அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்டின் போட்டியின்போதும் ஹியூஸூக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. சரியாக மாலை 4.08 மணிக்கு மைதானத்தில் உள்ள பெரிய திரையில் ஹியூஸ் தொடர் பான 20 நிமிட வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. (408 என்பது பிலிப் ஹியூஸ், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இணைந்த 408-ஆவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது)