September 17, 2021

பிலிப்ஸ் தயாரிக்கும் காற்று சுத்திகரிப்பான்!

இன்றைய யுகத்தில் வாகனங்கள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதையடுத்து ஆண்டு தோறும் காற்று மாசுபடுதல் தொடர்பான ஆய்வறிக்கையெல்லாம் வெளியாகத்தான் செய்கிறது.ஆனால், அதை தடுக்கும் வகையிலான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையில் காற்று மாசுபடுதலை தவிர்க்க முடியாவிட்டாலும், அதை கட்டுப்படுத்தலாம் என்ற நோக்கில் மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிலிப்ஸ் நிறுவனம் இப்போது காற்று சுத்திகரிப்பான் (ஏர் பியூரிஃபையர்) தயாரிப்பில் இறங்கியுள்ளது.
Air purifier philps
அறைகளில் சுத்தமான காற்றை அளிக்கக் கூடிய இந்நிறுவன ஏர் பியூரிஃபையர்கள் ரூ. 16,995 முதல் ரூ. 39,995 விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தியாவில் காற்று மாசு அதிகரித்து வருவதால், இத்தகைய காற்று சுத்திகரிப் பானின் தேவை அதிகரித்து வருகிறது. தற்போது நாம் சுவாசிக்கும் காற்றில் மனிதன் ரசாயன கதிரியக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொழிற்சாலைகளின் கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. இதுமட்டுமல்லாமல் மனிதன் பீடி, சிகரெட், கஞ்சா போன்ற கொடிய தற்கொலைக்கு ஈடான விஷத்தை உள்ளே இழுத்து அதை வெளியிடுவதால் அருகில் இருப்பவர்களுக்க மூச்சுத்திணரல், சுவாச உறுப்புக்களில் கோளாறுகள் மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கிக்கொள்கிறான்.

இதைக் கருத்தில் கொண்டு பிரத்யேகமாக காற்று சுத்திகரிப்பானைத் தயாரித் துள்ளதாக நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ. கிருஷ்ண குமார் தெரிவித்தார். இது தவிர, அல்ட்ரா சவுண்ட் போர்டபிள் இசிஜி கருவி மற்றும் சோலார் கிரிட் ஆகியவற்றை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.