September 25, 2021

பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘ஹையான்’ புயலுக்கு 10 ஆயிரம் பேர் பலி:

பிலிப்பைன்சில் வரலாறு காணாத வகையில் ஹையான் புயல் கோர தாண்டவம் ஆடியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சோகம் ஏற்பட்டுள்ளது.
nov 10 - philipines
பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘ஹையான்’ புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அதில் சமர், லிதே தீவுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. புயல் கரையை கடந்த போது மணிக்கு 325 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.அதனால் பலத்த மழை கொட்டியது. கடலில் சுமார் 15 அடி முதல் 20 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பின. அதனால் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

‘ஹையான்’ புயலின் கோர தாண்டவத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள லிதே தீவு கடும் பாதிப்புக்குள்ளானது. லிதே மாகாணத்தின் தலைநகர் தக்லோபான் நகரம் ஆக்ரோஷமான கடல் அலைகளால் கடும் சேதத்துக்கு ஆளானது.இதனால் கடற்கரை ஓரம் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. இது தவிர வெள்ளப் பெருக்கில் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் ஏராளமான வர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் குழுவினர் ஈடுபட்டனர். மேலும், மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.இதுவரை சுமார் 600 உடல்கள் மீட்கப்பட்டதால் 1000 பேர் பலியாகி இருக்கலாம் என கருதப்பட்டது. தற்போது தோண்ட தோண்ட பிணங்கள் வருவதால் சாவு எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த தகவலை லிதே மாகாண கவர்னர் டொம்னிக் பெட்டில்லா தெரிவித்துள்ளார்.

Typhoon Haiyan death toll could reach 10,000 in Philippines

*********************************************************************
The death toll from one of the strongest storms on record that ravaged the central Philippine city of Tacloban could reach 10,000 people, officials said Sunday after the extent of massive devastation became apparent and horrified residents spoke of storm surges as high as trees.