October 21, 2021

பிறவிலேயே கருப்பை இல்லாமல் இருந்தவருக்கு குழந்தை! – மருத்துவ சாதனை

முதன் முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செயது கொண்ட சுவீடனை சேர்ந்த 36 வயது பெண் குழந்தை பெற்று இருக்கிறார். பிறவிலேயே கருப்பை இல்லாமல் பிறந்த அவர் கடந்த வருடம் 60 வயது பெண் ஒருவரிடம் இருந்த கர்ப்பையை பெற்று கர்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர்அதில் கரு முட்டைகள் உற்பத்தி ஆகின. பின்னர் தம்பதிகள் கோதன்பர்க்கில் உள்ள சஹிகிரண்ஸ்கா பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் செயற்கை கருவூட்டல் சிகிச்சை பெற்று கொண்டனர்.
.wombtransplant-6.jpg
அதன் மூலம் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அப் பெண்ணுக்கு கடந்த மாதம் குறை பிரசவத்தில் (31 வாரம்) ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 1.8 கிலோ எடை உள்ளது. தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். இந்த தகவல் இங்கிலாந்தின் மருத்துவ பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றது மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
முதல் முறையாக கருப்பபை மாற்று அறுவை சிகிச்சை சவுதி அரேபியாவில் 2000 ஆம் ஆண்டில் நடந்த்து அது தோல்வி அடைந்தது.