September 29, 2021

பிரேசில் எக்ஸ் புட்பால் பிளேயர் பீலேவுக்கு மூணாம் மேரேஜ் முடிஞ்சிடுச்சு!

பிரேசில் ஸ்டார் ஃபுட்பால் பிளேயரா இருந்த பீலே, தனது கேர்ஸ் பிரண் மார்ஸியா சிபெல் ஆவ்கியை திருமணம் செய்து கொண்டார். பீலேவுக்கு இது 3-ஆவது மேரேஜ் ஆகும்.

bele july 11

பிரேசிலின் சாவ் பாலோவில் நகரில் குயாருஜாவில் இவர்கள் நேற்று முன்தினம் மோதிரம் மாற்றி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். எளிமையாக நடந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பீலே ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர். முதலாவது மனைவி ரோஸ்மேரி சோல்பியுடன் 12 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உண்டு. அடுத்ததாக பாடகி அசிரியா நாசிமென்டோவை திருமணம் செய்து, அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர்களுக்‍கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2008-ம் ஆண்டு அவரையும் விவகாரத்து செய்தார்.

இந்நிலையில், 75 வயதான பீலே, 42 வயது பெண் தொழிலதிபரான மார்சியா சிபிலி ஆகியை 3வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக பழகி வந்த நிலையில் இப்போது திருமணம் செய்துள்ளனர். இவர்களுடைய திருமணம் சாவ் பாலோவில் எளிமையான முறையில் நடைபெற்றது. இவர்கள் இருவரும் 1980-இல் நியூயார்க்கில் முதல்முறையாக சந்தித்தனர். 2010-இல் இவர்களின் நட்பு காதலாக மாறியது.

இதனையடுத்து, இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் இப்போது அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துள்ளனர். ஜப்பான் வம்சாவளியான மார்சியா ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் நிபுணர். மார்சியாவும் திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்‍கது.