October 16, 2021

பிரெய்லி முறைக்கு பைபை பிங்கர் ரீடர் வரப்போகுது!

பார்வையற்றவர்கள் படிப்பதற்காகவே பிரெய்லி எழுத்துமுறை கண்டுபிடிக்கப்பட்டது. காக்கி நிற அட்டையில், அச்சு வடிவத்தில் அழுத்தி பதிக்கப்பெற்ற எழுத்துகள் கொண்ட பெரிய புத்தகமாக பிரெய்லி புத்தகங்கள் இருக்கும். பின்னர், இந்த எழுத்துகளின் வடிவங்கள் சுருக்கப்பட்டு, சிறிய புத்தகங்கள் வடிவத்தில் வெளியானது. ஆனால், பார்வையற்ற நபர்கள் அல்லது பார்வையற்ற மாணவ, மாணவிகள் படிக்கும் பிரெய்லி புத்தகங்களை, அவர்களது நண்பர்கள் படிக்கவே முடியாது. அதேநேரத்தில், பிரெய்லி முறையில் படித்தவர்களுக்கான புத்தகங்களை கடைகளில் தேடிப் பிடிப்பதும் மிகவும் சிரமமான வேலையாக இருந்தது.
tec - oct 2
இதனால், பார்வைத்திறன் இல்லாதவர்களுக்காக புதிய படிப்பு முறையை கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ‘பிங்கர் ரீடர்’ எனப்படும் விரல் வடிவத்திலான ஒரு படிக்கும் மோதிரத்தை கண்டுபிடித்துள்ளது. பார்வையற்ற நபர்கள் இந்த எலக்ட்ரானிக்ஸ் மோதிரத்தை தங்கள் ஆள்காட்டி விரலில் அணிந்து கொண்டு, ஆங்கில புத்தகத்தை படிக்க முடியும். இதற்கு முன்னர் தாய்லாந்து நாட்டின் மிஸ்டர் லைட் அன்ட் மிஸ்டர் டார்க் முறையில் பார்வையற்றவர்கள் படிக்கும் புத்தகத்தை, சாதாரணமான நபர்களும் படிக்க முடிந்தது.

ஆனால், பார்வையுள்ளவர்கள் நன்றாக படிப்பதை போல், பார்வைத்திறன் இல்லாதவர்களும் தங்குதடையின்றி படிப்பதற்கு இந்த பிங்கர் ரீடர் மோதிரம் பயன்படுகிறது.இதற்காக அமெரிக்காவின் எம்ஐடி மீடியா லேப் ப்ளுயட் இன்டர்பேசஸ் குரூப் அமைப்பு ஒரு சிரிய கேமரா பொருத்தப்பட்ட விரல் மோதிரம் வடிவத்திலான எலக்ட்ரானிக் மோதிரத்தை கண்டு பிடித்துள்ளது. இந்த மோதிரம் போன்ற எலக்ட்ரானிக் கருவியை ஆள்காட்டி விரலில் அணிந்து கொள்ள வேண்டும். இதன் முன் பகுதியில் உள்ள மைக்ரோ கேமரா, ஆங்கில புத்தகத்தில் ஒரு வரி தொடங்கும் இடத்தில் வைத்துக் கொள்ளும்போது, அது அந்த வரியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் துல்லியமாக படம் பிடித்து, அதில் உள்ள எழுத்துகளை நமக்கு தெரிவிக்கிறது.

அதன்படி அந்த வார்த்தையை பார்வையற்ற நபர் உச்சரிக்க முடியும். வார்த்தை அல்லது வாக்கியம் முடிந்துவிட்டால் ஒரு சின்ன வைப்ரேஷன் ஏற்படும். இதனால், இந்த எலக்ட்ரானிக் பிங்கர் ரீடிங் மோதிரம், பார்வையற்ற நபர் சரியான முறையில் படிப்பதற்கு உதவி செய்யும் என்று முதல்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எம்ஐடி மீடியா லேப்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, “ஆய்வு கட்டத்தில் உள்ள இந்த எலக்ட்ரானிக் பிங்கர் ரீடிங் மோதிரம் விரைவில் சந்தைக்கு வந்துவிடும். இந்த முறை வந்துவிட்டால், பிரெய்லி முறைக்கு குட்பை சொல்லிவிட முடியும். அதேநேரத்தில், இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கான தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்களில் கொண்டுவர முடியுமா? என்று ஆலோசித்து வருகிறோம்” என்றனர்.

 

தகவல் உதவி :http://jannalmedia.com/page.php?id=1576