October 16, 2021

பிரபல கேமராமேன் அசோக் குமார் காலமானார்!

பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இன்று காலமானார். கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிற்குள் முடங்கிவிட்டதும். கடந்த 6 மாதமாக அவர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்த. அவரை மருத்துவர்கள் கை விட்ட நிலையில் வீட்டில் வைத்து கவனித்து வந்ததும் நினைவுக் கூறத்தக்கது. –
cameraman oct 22
ஜானி, கை கொடுக்கும் கை, காளி, மன்னன், வெற்றி விழா, சூரியன், உல்லாசப் பறவைகள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில், 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர், அசோக்குமார், 72. அவர், காமாக்னி, அன்று பெய்த மழை படங்களையும் இயக்கியுள்ளார். நெஞ்சத்தை கிள்ளாதே படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது உட்பட, தமிழகம், ஆந்திரா, கேரள மாநில விருதுகளும் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு, டிசம்பரில், ஐதராபாத் சென்றிருந்தபோது, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின், சென்னையில் வீட்டிலிருந்தவருக்கு, கடந்த மாதம் மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. சென்னை, காட்டாங்கொளத்தூரில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்த நிலையில் அசோக்குமாரின் மகன் ஆகாஷ் அசோக்குமார் ஒரு அறிக்கையில் ”என் தந்தைக்கு கடந்த 6 மாதமாக உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. சென்னையிலும், ஐதராபாத்திலும் மாறி மாறி சிகிச்சை அளித்தோம். கடந்த ஒரு வாரமாக அவசர சிகிச்சை பிரிவில் இருந்தார். அப்போது இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவை நல்ல முறையில் உதவினார்கள். அது எங்களுக்கு தெம்பை கொடுத்தது. தற்போது வீட்டில் வைத்து அவரை கவனித்து கொண்டிருக்கிறோம். இதனால் எல்லோருக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால். என் தந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதனால் திரையுலகினர் தங்களால் முடிந்த வழியில் அவருக்கு ஆதரவு தாருங்கள்.” என்று கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில் கூடுவாஞ்சேரியிலுள்ள அவர் இல்லத்தில் இன்று காலமாகி விட்டார்.

ஆறுதல் மற்றும் நேரில் செல்ல அவர் மகன் ஆகாஷ் போன் நம்பர் Akash +91 8297-384330