September 20, 2021

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் செல்போனோ , இ-மெயில் அட்ரஸோ கிடையாதாமில்லே!.

இந்தியா மக்ககளில் பெரும்பாலானோர் செல்போனும் கையுமாக திரியும் போது நம் பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் செல்போன் வைத்து கொள்ளவில்லை என்றும் அதேபோல் தனியாக இ மெயில் முகவரியும் வைத்து கொள்ளவில்லை என்றும் தெரிய வந்துள்ளது அவருடைய அலுவலகம் சார்பில்தான் இ-மெயில் உள்ளதால் பிரதமரின் செல்போன் பேச்சுகளை ஒட்டு கேட்பது, இ&மெயில் தகவல்களை திருடுவது எல்லாம் இங்கு சாத்தியமில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது..
26 -manmohan-singh.j
அண்மையில் உலகம் முழுவதும் 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி, செல்போன் பேச்சுகளை அமெரிக்க உளவுத்துறை ஒட்டு கேட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல்லின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டதற்கான ஆதாரத்தை, அமெரிக்க உளவுத்துறை முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டென் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்போன் பேச்சுகளையும் அமெரிக்க உளவுத்துறை ஒட்டு கேட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி பிரதமர் அலுவலக தகவல் தொடர்பாளரிடம் கேட்டபோது, ‘‘பிரதமர் மன்மோகன் சிங் தனிப்பட்ட முறையில் செல்போன் வைத்து கொள்ளவில்லை. அதேபோல், தனியாக இ& மெயில் முகவரியும் வைத்து கொள்ளவில்லை. அவருடைய அலுவலகம் சார்பில்தான் இ-மெயில் உள்ளது. இதனால், பிரதமரின் செல்போன் பேச்சுகளை ஒட்டு கேட்பது, இ&மெயில் தகவல்களை திருடுவது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று பதிலளித்தார்.

இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கை பொறுத்தவரை அவரது பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும், முதன்மைச் செயலாளர் குலோக் சாட்டர்ஜியும் இணையதளம் மற்றும் செல்போன் சேவைகளை பயன்படுத்துவதால் அவற்றின் மூலம் பிரதமரின் நடவடிக்கைகளை எளிதில் உளவு பார்க்க முடியும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Indian prime minister has no mobile phone, email account to hack
****************************************************************
India’s 81-year-old prime minister does not own a mobile phone or use personal email, giving New Delhi “no cause for concern” about new US hacking revelations, his office said Friday.The Guardian newspaper reported Friday that US spies eavesdropped on the phone conversations of 35 world leaders after White House, Pentagon and State Department officials gave them the numbers.