October 16, 2021

பிரதமரின் ஜனதன திட்டத்தின் கீழான 74 சதவீத வங்கிக்கணக்குகளில் நில் பேலன்ஸ்தான்!

ஏழை எளியோரும் வங்கிக்கணக்குகள் தொடங்க ஏதுவாக பிரதமர் நரேந்திர மோடி, ‘பிரதம மந்திரி ஜனதன திட்டம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தாரில்லையா?அதில் 5 கோடியே 30 லட்சம் வங்கிக்கணக்குகளில் பணம் இருப்பு இல்லையாம் .
pm bank
பிரதமரின் மக்கள் நிதி திட்டம் (பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா) தொடங்கப்பட்டு. இதில் கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு நிதி அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. கணக்கு தொடங்கி 6 மாதத்துக்கு பிறகு இதன்மூலம் ஓவர்டிராப்டாக ரூ.5,000 கடன் பெறவும் வசதி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வரும் ஜனவரி 26ம் தேதிக்குள் 7.5 கோடி பேருக்கு கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆயுள் காப்பீட்டுக்கு ரூ.90 செலுத்தினாலே போதும் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குபவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்கு பிறகு பலன்பெறலாம். இதற்காக எல்ஐசி நிறுவனம் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் காப்பீடு கோரி வரும் விண்ணப்பங்களை பொறுத்து கூடுதல் நிதியை அரசிடம் இருந்து இந்நிறுவனம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1000க்கு 3 ரூபாய் என்ற அடிப்படையில் ரூ.30,000 காப்பீட்டுக்கு ரூ.90 செலுத்தினால் போதுமானது.

இந்நிலையில் அண்மையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள பதிலில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் இதுதான்–

* கடந்த 7–ந்தேதி நிலவரப்படி நாடு முழுவதும் பிரதம மந்திரி ஜனதன திட்டத்தின் கீழ் 7 கோடியே 10 லட்சம் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

* கிராமப்புறங்களில் 4 கோடியே 20 லட்சம், நகர்ப்புறங்களில் 2 கோடியே 90 லட்சம் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

* பிரதம மந்திரி ஜனதன திட்ட வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 482 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

* இந்த திட்டத்தின் கீழான கணக்குகளில் 5 கோடியே 30 லட்சம் வங்கிக்கணக்குகளில் பணம் இருப்பு இல்லை. மொத்த கணக்குகளில் இது 74 சதவீதம் ஆகும்.