September 18, 2021

‘பிரசவ வலி’யை ஆண்கள் உணரச் செய்யும் மெடிக்கல் கேம்ப்! வீடியொ

ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக்கொள்ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும் அந்த நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது.

<dmenbirth_painiv>

தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களை, கிராமப் புறங்களில் பெற்றுப் பிழைத்தவள் என்று குறிப்பிடுகிறார்கள்..என்னதான் சொன்னாலும் வெறும் வார்த்தைகளால் இந்த வலியை ஆண்களால உணர முடியாது.
இதனிடையே, அந்த வலியை உணர்வதற்காக சீன மருத்துவமனையில் கருவிகளின் உதவியுடன் ஆண்களுக்கு பிரசவ வலி ஏற்படுத்தப்படுகிறது.ஆம்..சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் அய்மா மகப்பேறு மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்குதான் ஆண்களுக்கு பிரசவ வலியை உணரச் செய்வதற்காக வாரம் இருமுறை வகுப்புகள் நடைபெறுகின்றன.
தேடி வந்து பிரசவ வலியை அனுபவிக்க ஒப்புக் கொண்ட ஆண்களுக்கு, அடிவயிற்றில் சில உபகரணங்கள் பொருத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் அளவான மின் அதிர்ச்சி ஏற்படுத்தி வலி உண்டாக்கப்படுகிறது. இது அதிகரிக்கும் போது 5 நிமிடங்களுக்கு தாங்க முடியாத வலி ஏற்படுத்தப்படுகிறது.
அப்போது உடனிருக்கும் நர்ஸ் ஒருவர், கொஞ்சம் கொஞ்சமாக இந்த வலியின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்கிறார். இவ்வாறு ஒன்று முதல் 10 அலகுகள் வரை வலி அதிகரிக்கப்படுகிறது. சிலர் மூன்று அல்லது நான்கு அலகு எட்டியவுடன் அலறித் துடித்துப் போய் நிறுத்தச் சொல்லி விடுகின்றனர். அதிலும் பெரும் பாலானவர்கள் சில நிமிடங்களிலேயே வலியைத் தாங்காமல், வெளியேறி விடுகின்றனராம்.அதே சமயம் இந்த சோதனையில் ஈடுபட 100 ஆண்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனராம்.
தகவல் உதவி :http://jannalmedia.com/dpages.php?id=2590