September 29, 2021

பா.விஜய் இயக்கி நடிக்கும் ஸ்ட்ராபெர்ரி! – ஆல்பம்

மிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாகி, பிறகு நடிகரானவர் பா.விஜய். இவர் ‘இளைஞன்’ ‘ஞாபகங்கள்‘ ஆகிய இரண்டு படத்தில் நடித்திருந்தார். இரண்டு படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரவில்லை.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தும் வருகிறார். . இவர் இயக்கும் அந்த புதிய படத்துக்கு ‘ஸ்ட்ராபெர்ரி’ என்று பெயர் வைத்துள்ளார். இதில், சமுத்திரகனி, ரோபோ சங்கர், தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆவ்னி மோதி கதாநாயகியாக நடிக்கிறார். இவர், நகுல் நடிப்பில் வெளிவந்த ‘நான் ராஜாவாக போகிறேன்‘ படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.

இந்த படத்திற்கு ‘ஸ்ட்ராபெர்ரி‘ என்று ஆங்கிலத்தில் வைத்தது குறித்து இயக்குனரும், நடிகருமான பா.விஜய் கூறும்போது, ”ஒரு கவர்ச்சிக்காகத்தான் இந்த பெயர் வைத்தோம். நானும், ரோபோ சங்கரும் இந்த படத்தில் கால் டாக்சி டிரைவராக வருகிறோம்.

சென்னையை சுற்றியே கதை நகர்வதால், இந்த படத்திற்கு லோக்கல் மொழியில் தலைப்பு வைக்க எண்ணினோம். அதற்காகத்தான் வைத்திருக்கிறோம். இந்த படத்தில் நான் இயக்குகிறேன், தயாரிக்கிறேன் என்பதற்காக எனக்கே முக்கியத்துவம் கொடுக்க எடுக்கவில்லை. இப்படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் அளித்திருக்கிறேன்.

படத்தில் 40 நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. திகில் படமாக இது உருவாகி வருகிறது.:என்றார்.