September 27, 2021

பா. ஜ.கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் பாரதிய ஜனதா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் நடந்த தொகுதிப் பங்கீடு அறிவிப்பு கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக சார்பில் ஜி.கே. மணி, அன்புமணி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் ஈஸ்வரணும் ஆகியோர் பங்கேற்ற போது,பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதனை கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
bjp allaince 1
விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக வுக்கு 14

ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு – 8

வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு – 7

ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு 1 தொகுதி

பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சிக்கு -1

பாஜக – 8 தொகுதிகள் என போட்டியிடும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் எந்த எந்த தொகுதிகளில் கட்சிகள் போட்டியிடுகின்றன என்பது குறித்த அறிவிப்பை கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

அதன்படி,

தேமுதிக-

திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர்,

தொகுதிகளிலும்,

பாட்டாளி மக்கள் கட்சி – அரக்கோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆரணி, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளிலும்,

மதிமுக – காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி ஆகிய தொகுதிகளிலும்

ஐ.ஜே.கே. பெரம்பலூர் தொகுதியிலும்

கொமுதேக – பொள்ளாச்சி தொகுதியிலும்,

பாஜக- தென்சென்னை, வேலூர், நீலகிரி, கோவை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.