சிறுமிகளிடம் அதிகரிக்கும் பாலியல் கொடுமை: காத்துக் கொள்ளும் வழிமுறை!

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஆண்கள் 750,000-த்திற்கும் அதிகமானோர் சிறுமிகளுடன் பாலுறவு கொள்ளவே மிகவும் ஆர்வமாக இருக்கலாம் என்று குற்றப்பிரிவு விடுத்துஉள்ள எச்சரிக்கையானது, நாட்டில் 35 ஆண்களில் ஒரு ஆண், பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்துக் கொள்ளும் ஒரு ஆபத்தை கொண்டு எதிர்க்கொண்டு உள்ளனர். இங்கிலாந்து நாட்டின் தேசிய குற்றப்பிரிவு நடத்திய ஆய்வில் இந்த கொடூரமான தகவல் வெளியாகிஉள்ளது. இதில் மற்றொரு கொடூரமாக சுமார் 250,000 ஆண்கள், பருவம் அடையாத சிறுமிகளால் ஈர்க்கப்பட்டு இருக்கலாம் என்ற இங்கிலாந்து குற்றப்பிரிவின் அதிர்ச்சிகரமான தகவல்களை டெய்லி மெயில் வெளியிட்டு உள்ளது.
child shadow
மேலும் இங்கிலாந்தில் பெண் குழந்தைகள் தொடர்பாக ஆபாச படங்களை கூகுள் தேடலில், தேடப்படுவது என்பது கடந்த ஆண்டில் மட்டும் அதிகரித்து உள்ளது என்ற எச்சரிக்கையும் எழுந்து உள்ளது. பிரிட்டனில் மட்டும் சுமார் 3 மில்லியன் முறை இதுபோன்ற தேடல்கள் நடந்து உள்ளது. கூகுள் தேடலில் பாதிபேர் இதனையே தேடிஉள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

இது இங்கிலாந்து தகவல்தானே என்ற அல்ட்சியம் கூடாது. இங்கேயும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறது. மிகவும் நெருக்கமாக பழகும் ஒருவரே இதில் குற்றவாளியாக இருப்பதுதான் கொடுமையான விஷயம்.

குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டுபிடிக்கும் வழிகள்…

* சில உடல் ரீதியான மாற்றங்களை மருத்துவ சோதனையின் மூலமே கண்டறிய முடியும். அவை…

* நடப்பது அல்லது உட்காருவதற்குச் சிரமப்படுவது.

* மன உளைச்சலால் ஏற்படும் உடல் நலக்குறைவு, அனோரெக்சியா, புலிமியா போன்றவை.

* சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் அசவுகரியம்.

* சிறுநீர் உறுப்பில் மீண்டும் மீண்டும் ஏற்படும் நோய்த் தொற்று.

* குழந்தை உடல்ரீதியான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதை வாய், அந்தரங்க உறுப்பு அல்லது மலம் கழிக்கும் உறுப்புகளில் ரத்தப்போக்கு, ரத்தக் கசிவு, சிராய்ப்பு அல்லது அரிப்பு போன்றவை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

* மார்பகம், பின்புறம், தொடை அல்லது வேறு உறுப்புகளில் சிராய்ப்போ, காயமோ காணப்படுதல்.

* எந்த வயதுக் குழந்தையாக இருப்பினும் பால்வினை நோய்கள் இருத்தல்.

* முறையற்ற கருத்தரிப்பு.

* குழந்தைகளின் நடவடிக்கை மாற்றங்களும் பாலியல் வன்முறையைக் காட்டும் அறிகுறியாகும். ஆனாலும் அது பாலியல் கொடுமையை மட்டும் குறிக்காது. இவற்றோடு கூட வேறு அறிகுறிகளும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்…

* பாடங்களை கற்றுக்கொள்வதில் சிரமம். காரணமில்லாமல் குறைவான மதிப்பெண்களைப் பெறுவது. ஞாபகசக்தியின் குறைபாடு, சிந்தனையை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் போன்றவை.

* விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற உடலுழைப்பு சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட ஆர்வமின்றி இருத்தல்.

* விரல் சப்புவது, உறக்கத்தில் சிறுநீர் கழித்தல், பேச்சுத்திறன் குறைபாடு போன்ற வயதிற்கு பொருத்தமற்ற சிறுகுழந்தையைப் போன்ற செயல்களைச் செய்தல்.

* எப்போதும் அடுத்தவரைச் சார்ந்திருக்கும் தன்மை.
* திடீரென நிறைய பணமும், பரிசுகளும் சேர்வது.

* உடல் ரீதியான காரணம் ஏதுமின்றி தலைவலி, வயிற்றுவலி அல்லது வாந்தி பற்றி முறையிடுதல்.

* உடல் சோர்வு அல்லது உறங்குவதில் சிரமம்.

* தன்னைப் பேணிக்கொள்வதிலும், உடல் நலத்தை கவனிப்பதிலும் ஆர்வமின்மை.

* மனச்சோர்வுக்கு ஆளாகுதல்.

* சமூகத்திலிருந்து விலகி இருத்தல. (பெரியோர், நண்பர் என எல்லா உறவுகளிலும் நாட்டக்குறைவு)

* திடீரென பயம், இனம் தெரியாத வெறுப்பு, மன உளைச்சல் போன்றவற்றிற்கு ஆளாகுதல். (கொடுமைப்படுத்தப்பட்ட இடம் குறித்த பயம், குறிப்பிட்ட நபரைக் கண்டால் பயப்படுவது, விளையாட்டு அல்லது நீச்சல் உடை அணிய மறுத்தல் போன்றவை)

* உணர்ச்சியைத் தூண்டும் ஆபாசமான உடை அணிதல் அல்லது உடலில் ஏற்பட்ட காயங்களை மறைக்க அல்லது அழகில்லாமல் தோன்ற அடுக்கடுக்காக உடையணிதல்.

* வயதிற்கு பொருத்தமற்ற பாலுறவு பற்றிய அறிவு, நடவடிக்கை அல்லது பேச்சு.

* வகுப்புப்பாடம் அல்லது ஓவியப் பயிற்சியில் தன் பாலியல் அறிவை வெளிப்படுத்துதல்.

* தன்னைவிட வயதில் சிறிய அல்லது வலிமை குறைந்த குழந்தைகளிடம் பாலியல் கொடுமை இழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

* வழக்கத்திற்கு மாறாக வரைமுறையின்றி எல்லோரிடமும் நெருக்கமாக பழகுதல்.

* சரியான காரணமின்றி வீட்டைவிட்டு ஓடிப்போவது.

* குடி, போதை மருந்துப்பழக்கம் ஏற்படுவது, உடலுறுப்புகளைச் சிதைத்துக் கொள்ளுதல், சட்டத்தை மீறுதல், தற்கொலை முயற்சி செய்தல் போன்ற தனக்குத் தீமை பயக்கும் செயல்களில் ஈடுபடுதல்.

* சம்பந்தப்பட்ட குற்றவாளி நெருக்கமானவர் என்றாலும், அவரிடம் இருந்து குழந்தைக்கு விடுதலையும், பாதுகாப்பும் அளிப்பது பெற்றோரின் கடமை. உறவுகளை விட, நட்பை விட, எல்லாவற்றையும் விட உங்களுக்கு உங்கள் குழந்தை முக்கியம்.