October 16, 2021

பாலா-WIN பரதேசிக்கு சர்வதேச திரைப்பட விழாவில் 2 விருதுகள்!!

பாலா இயக்கத்தில் உருவான பரதேசி பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. சிறந்த இயக்குனர் பாலா, நடிகர் அதர்வா, ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறந்த ஆடை வடிமைப்பாளர் விருது மட்டுமே பூர்ணிமா ராமசாமிக்கு கிடைத்தது. இந்த நிலையில், லண்டனின் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பரதேசி படத்திற்கு லண்டன் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது.சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை செழியனும், சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான விருதை பூர்ணிமா ராமசாமியும் வென்றுள்ளனர்.
20 - Paradesi Poornima_chezhiyan
தேயிலை தோட்ட தொழிலாளிகளின் வலி மிகுந்த வாழ்க்கையை சொல்லும் விதமாக பாலா இயக்கிய படம் பரதேசி. அதர்வா, வேதிகா, தன்சிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். செழியன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.இப்படத்துக்கு இந்திய அரசின் தேசிய விருது கிடைக்கும் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படத்தின் ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமிக்கு மட்டும் தேசிய விருது கிடைத்தது.

இதையடுத்து லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு 9 பிரிவின் கீழ் பரதேசி படத்துக்கு விருது கோரி பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்படத்தின் ஒளிப்பதிவாளர் செழியன், காஸ்டியூமர் பூர்ணிமா ராமசாமி ஆகிய இருவருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் லண்டன் சர்வதேச திரைப்பட விழா குழுவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.