September 27, 2021

பார்டர் செக்யூரிட்டி போர்ஸுல் பணி வாய்ப்பு!

பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள இன்ஜினியரிங் பணியிடங்கள் 49ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

border security
பிரிவுகள்: ஜூனியர் இன்ஜினியர் – சப்-இன்ஸ்பெக்டர் – எலக்ட்ரிகலில் 20ம், சப்-இன்ஸ்பெக்டர் – ஒர்க்சில் 29ம் சேர்த்து மொத்தம் 49 காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: எலக்ட்ரிகல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். ஒர்க்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50/–ஐ ‘டி.டி.,’ அல்லது போஸ்டல் ஆர்டர் மூலமாக செலுத்த வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறனறியும் தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவமாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளைச் சேர்த்து பரிந்துரைக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.06.2015

இணையதள முகவரி: <http://bsf.nic.in/doc/recruitment/r153.pdf> மற்றும் <http://bsf.nic.in/doc/recruitment/r154.pdf>