January 30, 2023

பாரீஸ் பருவ நிலை உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்து! புவி வெப்பமயமாக்குதலை கட்டுப்படுத்தும்?

“குளோபல் வார்மிங்’ என்று சொல்லப்படுகிற உலக வெப்பமயமாதல், இப்போது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள பிரச்சினை ஆகும். புவியை பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றம்தான் வெப்பமயமாக்குவதாக கூறப்படுகிறது.இந்த வாயுக்கள் வெளி யேற்றத்தை உலக நாடுகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் அரங்கில் 171 நாடுகளின் தலைவர்கள் நேற்று ஓரணியில் திரண்டனர்.ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் நடத்திய இந்த கூட்டத்தில் ‘பாரீஸ் உடன்படிக்கை’ என்று அழைக்கப்படுகிற உடன்பாட்டில் இந்தியா உள்பட 171 நாடுகள் கையெழுத்திட்டன.சவுதி அரேபியா, ஈராக், நைஜீரியா, கஜகஸ் தான் உள்ளிட்ட எண்ணெய் வளம் மிகுந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் இலக்கு. ஒப்பந்தத்தில் கையெழுத் திட்ட உலகத் தலைவர்கள் புவி வெப்பமடைவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
global apr 24
இந்த பாரீஸ் பருவநிலை ஒப்பந்தமானது நடைமுறைக்கு வர வேண்டுமானால் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ள உலக நாடுகளில் 55 நாடுகளாவது இதில் இணைய வேண்டும். இந்த நிகழ்வு 2002-ல் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், பாரீஸ் மாநாட்டில் உலகத் தலைவர்கள் காட்டிய ஆர்வத்தை வைத்து பார்க்கும்போது இந்த ஆண்டு இறுதியிலேயே பாரீஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வர சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது

ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்வின்போது பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், “நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது. விளைவுகள் பற்றி சற்றும் யோசிக்காமல் செய்யும் நுகர்வு கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும். இன்று இந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திடுவதன் மூலம் எதிர்காலத்துக்கான புதிய உடன்படிக்கையை செய்து கொள்கிறோம்” என்றார்.

பருவநிலை, அமைதிக்கான ஐ.நா. தூதுவர் லியானார்டோ டி காப்ரியோ கூறும்போது, “இன்று நாம் பரஸ்பரம் கைகுலுக்கி நட்பு பாராட்ட லாம். ஆனால், ஒவ்வொரு முறையும் வெறும் கூட்டமாக கூடிப் பிரிவதால் மட்டுமே இந்த உலகுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. இனி பேச்சுகள் வேண்டாம், எந்தவித சமாளிப்புக் காரணங்களையும் கூற வேண்டாம், ஆய்வு செய்கிறோம் என இன்னும் 10 ஆண்டுகளை வீணடிக்க வேண்டாம். இந்த உலகம் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் எடுக்கும் நல்ல முடிவு எதிர்கால சந்ததியினரால் பாராட்டப்படும். தவறான முடிவு எடுத்தால் எதிர்காலம் உங்களை சபிக்கும்” என்றார்.

இந்த உடன்படிக்கை, புவியை வெப்பம் அடையச்செய்யும் பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை உலக நாடுகள் கட்டுப் படுத்துவ தற்கு வகை செய்யும்.இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளின் பாராளுமன்றங்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புவி வெப்பமயமாதலுக்கு 55 சதவீதம் காரணம் என கை நீட்டி குற்றம் சாட்டப்படுகிற 55 நாடுகளின் பாராளுமன்றங்கள் ஒப்புதல் அளித்த 30 நாளில் இந்த உடன்படிக்கை அமலுக்கு வரும்.இந்த கூட்டத்தின்போது, நீண்ட காலமாக பணக்கார நாடுகள் தொழிலில் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், பருவ நிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டும் ஏழை நாடுகளின் தோளில் சுமத்த முடியாது என்ற நிலைப்பாட்டை இந்தியா கட்டிக்காத்தது குறிப்பிடத்தக்கது.