September 20, 2021

பாதுகாப்பான கார்கள் பத்து லட்சம் மட்டுமே!

இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சம் வாகன விபத்துகள் நடப்பதாகவும், 1.50 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், சமீபத்தில் கார்களுக்கு நடத்தப்பட்ட கிராஷ் சோதனையும் வேதனை தருவதாக அமைந்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான கார் மாடல்களில் குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள்கூட இல்லை என குளோபல் என்சிஏபி அமைப்பு குறிப்பிடுகிறது. அந்தவகையில் தற்போது நம் நாட்டு மக்களின் சராசரி பட்ஜெட் தொகையான ரூ.10 லட்சத்திற்குள் சிறப்பான பாதுகாப்பை வழங்கும் 5 சிறந்த கார் மாடல்கள் பற்றி காணலாம்…
car nov 29
நிசான் மைக்ரா ஆக்டிவ்:

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிசான் மைக்ராவின் ஆக்டிவ் மாடலின் டாப் வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக், வேகத்தை உணர்ந்து கதவுகள் பூட்டிக்கொள்ளும் வசதி, ஏபிஎஸ் பிரேக், பிரேக் அசிஸ்ட், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் போன்றவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. பட்ஜெட் விலையில் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்ட மாடலை தேடுவோருக்கு இது சிறந்த தேர்வு.

ஹூண்டாய் எலைட் ஐ20

வசதிகள் ததும்பி வரும் ஹூண்டாய் ஐ20 காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் குறைவில்லை. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், மழை வந்தால் தானாக இயங்கும் வைபர் வசதிகளுடன் 6 உயிர் காக்கும் காற்றுப்பை, ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகள் உள்ளன. இந்த பிரிவில் தற்போது ஏர்பேக்குகளை நிரந்தர உதிரிபாகமாக கொண்டுவரும் போக்ஸ்வேகன் போலோவும் சிறந்த கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை அளிக்கும் மற்றொரு கார் மாடல்.

ரெனோ டஸ்ட்டர்

சிறந்த கட்டுமானத்துடன் சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கிறது. முன்புறத்தில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பத்துடன்கூடிய எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூன் சிஸ்டம், இன்ஜினுக்கான பாதுகாப்பு கவசம் போன்றவை இந்த காரின் பாதுகாப்புக்கான கூடுதல் அம்சங்கள்.

புதிய ஹோண்டா சிட்டி

டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், ஜி போர்ஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பம், பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த பாதுகாப்பு வசதிகளை அளிக்கிறது. மிகச்சிறந்த டிசைன், செயல்திறன் மிக்க இன்ஜின் ஆகியவையும் ஹோண்டா சிட்டியின் பலமாக உள்ளது. இந்த பிரிவில் ஹூண்டாய் வெர்னாவும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது. 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி தொழில்நுட்பங்களுடன், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர் வசதிகளும் உள்ளது. இதன் ரியர் வியூ கண்ணாடி பிரத்யேக பூச்சு கொண்டிருப்பதால், இரவில் கண்கூச்சத்தை தராது. விரைவில் இந்த காரின் பேஸ்லிப்ட் மாடல் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

போர்டு எக்கோ ஸ்போர்ட்

ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த பாதுகாப்பு வசதிகளை வழங்கும் மாடல்களில் ஒன்று போர்டு எக்கோஸ்போர்ட். டாப் வேரியண்ட்டில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், 6 காற்றுப்பைகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் கொண்டது. மைக்ரோசாப்ட் தயாரித்து கொடுத்த ஷிசீழிசி தகவல் தொடர்பு வசதியும் இருக்கிறது. விபத்தில் சிக்கும்பட்சத்தில் இந்த வசதி மூலம் 108 தொலைபேசி எண்ணுக்கு அவசர அழைப்பு சென்று, விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பதற்கான வசதி உள்ளது.