September 20, 2021

பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கம்!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியில் போட்டியிட விரும்பினார் ஜஸ்வந்த் சிங். ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இந்நிலையில், அவர் சுயேச்சையாக பார்மர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.மேலும், பாஜகவில் போலிகள் புகுந்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.இதை அடுத்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, அவரை பாஜகவில் இருந்து தாற்காலிகமாக 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக பாஜக அறிவித்துள்ளது.
JaswantSingh_
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தானின் பார்மரை சேர்ந்தவர். இப்போது மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் தொகுதி எம்.பி.யாக அவர் உள்ளார். மக்களவைத் தேர்தலில் பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த் சிங்குக்கு வாய்ப்பளிக்க பாஜக மறுத்து விட்டது. எனவே, அத்தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு, பாஜக கேட்டுக்கொண்டது. எனினும், கட்சியின் அறிவுறுத்தலை ஜஸ்வந்த் சிங் ஏற்க மறுத்துவிட்டார். இதனால், கட்சியின் நடவடிக்கைக்கு அவர் ஆளானார்.

பாஜகவில் இருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்படுவது, இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்படும் முகமது அலி ஜின்னாவைப் புகழ்ந்ததற்காக, 2009-ல் ஜஸ்வந்த் சிங்கை பாஜக நீக்கியது நினைவுகூரத்தக்கது.