October 24, 2021

பழைய ரூபாய் நோட்டுக்களை இப்போதே மாற்றிக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2005ஆம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை இப்போதே வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் அதே சமயம் ஜூலை 1ஆம் தேதிக்கு பிறகும், வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை வாயிலாக பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம்” என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
jan 25 - currency
இரு தினங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி, 2005ஆம் ஆண்டிற்கு முன்பாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்போதிலிருந்தே இது போன்ற நோட்டுக்களை மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி தற்போது விடுத்துள்ள அறிக்கையில், ”தற்போது 2005ஆம் ஆண்டிற்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மிகவும் குறைந்த அளவில் தான் உள்ளது. எனவே, இப்போதிலிருந்தே 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுக்களை திரும்பபெறுவது என்பது, சர்வதேச அளவில் வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். எனவே, இதுகுறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்.” எனக் கூறப்பட்டுள்ளது.