October 24, 2021

பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகிக்க தடை!- பிரான்ஸ் அதிரடி!

தற்போது உலகமெங்குமுள்ள குழந்தைகள் மொபைல் போனில் புகுந்து விளையாடுகிறார்கள். பெற்றோர்களும் அதனை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் மருத்துவத்துறை இதனை கடுமையாக கண்டிக்கிறது. தற்போது குழந்தைகளை அழைத்துக்கொண்டு எலும்பு சிகிச்சை நிபுணர்களிடமும், பிசியோதெரபி மையங்களுக்கும் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
பல மணி நேரம் ஒரே இடத்தில் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு, தசைகள் பாதிப்படைகின்றன. மன நிம்மதி, தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பையும் தருகிறது.

இதையடுத்து பிரான்சில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட இணைய வசதிகள் அடங்கிய சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்ளெட்ஸ், ஸ்மார்ட் வாட்சஸ் ஆகியவற்றை உபயோகிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இன்றைய நாட்களில் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை பல்வேறு தரப்பினர் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் வரும் செப்டம்பர் மாதம் முதல் பிரான்சில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஆசிரியர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ள நிலையில், தற்போது மாணவர்களுக்கு தடை உத்தரவு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் என கூறியுள்ள அதிகாரிகள், இது போன்ற நடவடிக்கைள் பாடத்திட்டத்தின் அடிப்படை என்றும் கூறியுள்ளனர்.முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் கார் ஓட்டுபவர்கள் ஸ்மார்ட் போன் உபயோகிக்க தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இப்படி மொபைல்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு உடனே வார்த்தைகளை கோர்த்து பதில் சொல்லத் தெரிவதில்லை. மற்றவர்களோடு பழகவோ, பிற குழந்தைகளோடு இணைந்து விளையாடவோ தெரியாமல் தனிமைப்பட்டு விடுகின்றனர். இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும்.

உங்கள் குழந்தைகள் மொபைல், கம்ப்யூட்டர் போன்றவற்றிற்கு அடிமை ஆகி உள்ளார்களா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். செல்போனோ, டேப்லட்டோ இல்லாத விளையாட்டுகளை விளையாட மறுப்பார்கள். யாருடனும் இயல்பாக பழகமாட்டார்கள். பக்கத்து வீட்டுக் குழந்தையுடன் நட்பாக இருக்க மாட்டார்கள்.

உரிய வயது வந்தபிறகும் சரளமாக பேச வராது. வீடியோ கேமை விளையாட விடாமல் தடுத்தால் ஆக்ரோஷமாகி கத்துவார்கள். உங்களோடு பேசமாட்டார்கள். இதை தடுக்க இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளிடம் செல்போன் உள்பட எந்த திரையுள்ள கருவிகளையும் தராதீர்கள். ஒருவர் ஒரு நாளில் டி.வி. உள்பட எல்லா திரையுள்ள கருவிகளையும் 2 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும்.

அதற்கு மேல் பார்க்கக் கூடாது என்கிறது சமீபத்திய ஆய்வு. அதேபோல் குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் அவர்களுக்கு பரிசாக எந்தவொரு திரையுள்ள கருவிகளையும் வாங்கித் தராதீர்கள்,