September 20, 2021

பல் தேய்க்கத் தெரியுமா.. உங்களுக்கு?

அந்தக் காலத்தில் 30,40 வயதைத் தாண்டியவர்கள் தான் ஊருக்கு ஒன்று காணப்படும் பல் கிளினிக்கிற்கு பல் சொத்தை என செல்வார்கள்…ஆனால் ,இப்பொழுதெல்லாம் ஐந்து வயது பிள்ளைகளுக்கு ஆறு பல் சொத்தை என வொயிட் சிமெண்டால் அடைக்கிறார்கள் அதிலும் பல் சொத்தை, பல் வலி, பல் கூச்சம், பல்லில் இரத்தம் வடிதல் போன்றவை நூற்றுக்கு 80% பேருக்கு இருக்கும் பிரச்சினைகள் ஆகி விட்டது. இப்போதெல்லாம் வீதிக்கு வீதி முளைத்துவிட்ட டெண்டல் கிளினிக்கில் கூட்டம் தான் அலைமோதுகிறது… இத்தஃனைக்கும் திடீர் திடீர் என புது புது பிராண்டுகளில் பற்பசைகள் அறிமுகமாகியும் பற்சொத்தைக்கும்,பல்லில் இரத்தல் வடிதலுக்கும் சரியான தீர்வு கிடைத்த பாடில்லை…விதவித மான டிசைன்களில் வரும் பிரஷ்களும் எந்நோயையும் தீர்த்தபாடில்லை.
helaht dental
மேலும் அப்போது வேப்பங்குச்சி, ஆலங்குச்சி, கருவேலங்குச்சி, உப்பு, சாம்பல் போன்ற பக்க விளைவு இல்லாத இயற்கையான பொருட்களை உபயோகித்து பல் தேய்த்து வந்தார்கள்…. இதனால் பல் சொத்தை, வலி, சிறிய வயதிலே பற்களை இழத்தல், வாய் துர்நாற்றம், போன்ற எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் இயற்கையான பற்களுடன்….ஆனால் இப்போது நாம் உபயோகப்படுத்தும் பேஸ்ட்களில் நிகோடின் கொஞ்சம் கூட இல்லை.. நிகோடின் அதிக அளவில் உள்ளது என்று வெளியிட்டு நம்மை பீதியடைய வைக்கிறார்கள்….

இதனிடையே தினமும் காலை இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்க வேண்டும் என்பதை பெரும் பாலானோர் கடைப் பிடிப்பதில்லை. பலரும் கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கி விட்டு புளிச்,,புளிசென்று வாயைக் கொப்பளித்து விட்டு போய் விடுவர். வேறு சிலரோ பிரஷ் தேய்ந்து போகும் அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பற்களைத் தேய்ப்பர் இரண்டுமே தவறான விஷயங்கள்.

அதிக அழுத்தம் கொடுத்தோ அழுத்தமே இல்லாமலோ பல் துலக்கக் கூடாது.மிதமான அழுத்தம் கொடுத்து (படத் தில் காட்டியிருப்பது மாதிரி) குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும். நம் பற்களில் ‘எனாமல்’, ‘டென்டின்’, ‘பல்ப்’ என்று மூன்று முக்கிய அடுக்குகள் உண்டு. இதில் ‘எனாமல்’ தேய்ந்தால், ‘டென்டின்’ வெளிப்படும். பல் கூச்சத்துக்குக் காரணம் இதுதான். இந்த பல் கூச்சத்தைப் போக்க, இன்னும் நன்றாக பல் துலக்க வேண்டும் என்று நினைக்கும் நம் ஜனங்க, கிரைண்டர் அரைப்பது மாதிரி நீண்ட நேரத்துக்கு பற்களை இழு இழுவென இழுத்து தேய்கின்றனர். இது பற்களை மேலும் பலவீனப்படுத்திவிடும். டாக்டர்கள் பல் துலக்குதல் என்பதை ‘மணிக்கட்டு செயல்’ என்கிறார்கள். அதாவது, மணிக்கட்டை மட்டும் பயன்படுத்தி மெதுவாக செய்ய வேண்டிய செயல் அது. மேலிருந்து கீழும் கீழிலிருந்து மேலுமாகத்தான் பிரஷ்ஷை அசைக்க வேண்டும். இரு புறமும் உள்ள கடவாய்ப் பற்களை மட்டுமே நேராகத் துலக்க வேண்டும், அதுவும் மென்மையாக! பலரும் இப்படிச் செய்வதில்லை.

ஜெல் உள்ள பற்பசையைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. அதில் உள்ள சிலிக்கா பவுடர் பல்லின் எனாமலைப் பாழாக்கிவிடும். பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். அஜீரணம் அதிக அமிலத்தன்மை அதிகப் பித்தம் ஆகியவை வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள். இதைப் போக்க சீரகத்தைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தலாம்.
teeth brush 2
பல் ஈறுகளில் ரத்தம் வடிதல் வாய்ப் புண் ஆகியவற்றாலும் துர்நாற்றம் ஏற்படலாம். இவை ஆரம்ப நிலை சர்க்கரை நோயின் அறிகுறியாக இருப்பதால் அந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிப்பது நல்லது. கிராம்பு ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களை வாயில் அசைபோடலாம். இந்தப் பொருட்கள் துர்நாற்றத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதுடன் அஜீரணத்தையும் குணமாக்கும்.