September 25, 2021

பத்ம விருதுகள் பெற பரிந்துரைப்பத்தில் நிலவும் முறைகேடு!

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற பரிந்துரைக்கப்பட்டோரின் பட்டியலில், விஐபிக்களின் உறவினர்கள் பலரும் இடம்பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.விருதுகள் என்பது கலைஞர்களையும் கலைகளையும் ஊக்கு விக்கும் வகையில் வழங்கப்பட்டு வந்த காலம் போய், அதிலும் ஊழலும், முறைகேடுகளும் நிறைந்துவிட்டன என்பதுவெளிச்சத்திற்கு வந்துள்ளது
nov 10 padma-awards-
கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி வருகிறது.நமது தமிழ்நாட்டில் உள்ள பல கலை வல்லுனர்களுக்கு இன்னும் இவ்விருதுகள் வந்து சேரவில்லை என்ற ஆதங்கம் தமிழர்களிடம் மேலோங்கி உள்ளது.

குறிப்பாக, தமிழர்களின் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்திருக்கும் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு இவ்வளவு காலம் ஆகியும் பத்ம விருது வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமும், ஆற்றாமையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து தமிழர்களுக்குமே உண்டு.

இந்நிலையில், பத்ம விருதுகளுக்கு உரிய கலைஞர்களை எந்த அளவுகோலின்படி தேர்வு செய்கிறார்கள்? இதுவரை யார் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று யார்,யார் பரிந்துரைத்துள்ளார்கள்? என்று சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வினாக்கணை தொடுத்திருந்தார்.

அதன் விவரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், பல்வேறு விஐபிக்கள், தங்களது பிள்ளைகள், உடன்பிறப்புகள், உறவினர்களின் பெயர்களையே பரிந்துரை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, பாரத் ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர், தனது சகோதரி உஷா மங்கேஷ்கர், பின்னணி பாடகர் சுரேஷ் வட்கர், சமூக சேவகர் ராஜ்மால் பரக் ஆகியோரது பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான அமர்சிங், தனது நம்பிக்கைக்குரிய நடிகை ஜெயபிரதாவை பரிந்துரைத்துள்ளார்.அதே போல, பத்ம விபூஷன் விருது பெற்ற உஸ்தாத் அம்ஜத் அலி, அவரது மகன்கள் அமான், அயான் மற்றும் பாடகர் கௌஷிகி சக்ரபர்தி, தபலா கலைஞர் விஜய் காடே, கலைஞர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி என்கிற நடராஜ கிருஷ்ணமூர்த்தி, சித்தார் கலைஞர் நிலத்ரி குமாரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.ஒரு சில பிரமுகர்கள் இதுபோல தங்களது உறவினர்கள், நண்பர்களின் பெயர்கள் என 25 பேரைக் கூட பரிந்துரைத்துள்ளனர்என்பது இந்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

VIPs nominated relatives, friends for Padma awards 2013: RTI query
***************************************************************************
There is a controversy brewing over the 2013 Padma awards. An RTI application filed reveals that VIPs nominated family members and colleagues in sheer disregard to conflict of interest.