September 18, 2021

’பத்மஸ்ரீ ஸ்ரீதேவி உடல் ராஜ மரியாதையுடன் தகனம்! மரணத்திற்கான காரணம் தெரியுமா?

குடும்ப நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மரணமடைந்தார். ஓட்டல் அறையின் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் உயிரிழந்ததாக தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர்.  விசாரணைக்கு பின்னர் நேற்று அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனை அடுத்து, அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு தனி விமானம் மூலம் நேற்றிரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து, அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா கிரீன் ஏக்கர்ஸ் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து வரப்பட்ட உடலை பார்த்த ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் தேற்றினர். ஸ்ரீதேவியின் உடலுக்கு குடும்பத்தினர் சடங்குகளை செய்தனர்.

பின்னர் அவரது உடல் அப்பகுதியில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

மாநில அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்ட பின்னர், அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. மூவர்ணக்கொடி போர்த்தப்பட்ட அவரது உடல் வாகனத்தில் செல்ல, அதிகளவிலான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சோகத்துடன் பின்தொடர்ந்து வந்தனர்.மும்பை வில்லேபார்லே மேற்கு பவன்ஹன்ஸ் அருகே உள்ள மின்சார மயானத்தை அவரது உடல் வந்தடைந்ததும் சம்பிராதயப்படி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. மாலை சுமார் 6 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

டெயில் பீஸ்:

ஸ்ரீ தேவியின் மரணம் பல மர்மங்களை கொண்டதோ இல்லையோ பல மன அழுத்தங்களை கொண்டதாக இருப்பது தெரியவருகிறது .தனது மகள்கள் தான் வாழ்க்கை என இருந்த ஸ்ரீ தேவி நவீன வளர்ப்பால் தனது மகள் தனது முன்னாள் கணவரின் மகனுடன் காதல்வயப்பட்டு நெருக்கமாக பழகுவதை கேட்டதில் இருந்து ஸ்ரீ தேவி கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் . மகளுக்கு எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவர் கேட்க வில்லை என்றும் சொல்லபடுகிறது . அதனாலே மகள்களுடனேயே ஸ்ரீதேவி இருந்ததாகவும் . மகளின் நடவடிக்கைகளால் நண்பர் வட்டத்தால் மனஉளைச்சல் ஏற்ப்பட்டு மது அருந்துவதை அதிகரித்து கொண்டதாகவும் சொல்லபடுகிறது . ஆக இந்த மயில் மரணத்துக்கு காரணம் இதுதானா?