October 21, 2021

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தாக்கப்பட்டது ஏன்? வீடியோ இணைப்பு

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி செய்திச் சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக இருக்கிறார் ராஜ்தீப். மூத்த பத்திரிகை யாளர். இவர் மோடியின் அமெரிக்க சுற்றுப் பயண செய்தி சேகரிப்புக்காக அங்கு போயுள்ளார். நியூயார்க் மேடிசன் ஸ்கொயரில் நடந்த மோடி பேச்சை கவர் செய்வதற்காக அங்கு சென்றிருந்தபோது, திடீரென மோடி ஆதரவுக் கும்பல் ஒன்று ராஜ்தீப்பை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கியது. ராஜ்தீப், மோடி ஆதரவாளர்களை சந்தித்து பேட்டி எடுத்துக்கொண்டிருந்த போது  இந்த திடீர் தாக்குதல் நடந்தது . ஏற்கெனவே அங்கு கூடியிருந்த சில மோடி எதிர்ப்பாளர்களை பேச அழைத்ததால், மோடி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.இந்த சம்பவம் குறித்து ராஜ்தீப் விடுத்துள்ள டுவிட் செய்தியில், நல்லவேளை என்னைத் தாக்கியவர்களை நாங்கள் கேமராவில் படம் பிடிக்க முடிந்தது. இப்படிப்பட்டவர் களை வெட்கப்பட வைக்க அவர்களது முகத்தை அம்பலப்படுத்துவதுதான் என்று கூறியுள்ளார்.
Rajdeep-Sardesai-Fight
அந்த வீடியோவைப் பார்க்க ::https://www.youtube.com/watch?v=Vu4z3xtHtck

இதனிடையே  காலை வெளியாகியிருக்கும் வேறொரு வீடியோ பதிவில், அங்கிருக்கும் ஆதரவாளர்களை ராஜ்தீப் ஆபாசமாக திட்டுவதும், பதிலுக்கு அவர்கள் திட்டுவதும், தொடர்ந்து முதலில் ராஜ்தீப் தாக்க முற்பட்டதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவையும் தற்போது பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ இதுதான்:https://www.youtube.com/watch?v=jmfCrM0sjTI

அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.