September 20, 2021

பட்டபடிப்பு முடித்த / முடிக்க போகிறவர்களுக்கு ஸ்டேட் பாங்க் பி.ஓ. பணி வாய்ப்பு!

வங்கி என்று சொன்னாலே நம் எண்ணத்தில் தோன்றும் பாரத ஸ்டேட் வங்கி எஸ்.பி.ஐ., என்ற பெயரால் நம் அனைவராலும் அறியப்படுகிறது. 19ம் நூற்றாண்டில் துவங்கப்பட்டாலும், இன்றைய நவீன தொழில் நுட்பங்களை முழுமையாக உள்வாங்கி அதி நவீன வங்கிச் சேவைகளைத் தருவதிலும், அதிகபட்ச கிளைகள், அதிக பட்ச ஏ.டி.எம்., மையங்களை கொண்டிருப்பதிலும் இந்த வங்கி பிரசித்தி பெறுகிறது. இந்த வங்கியில் பணிபுரிவதை பெருமையாகக் கருதுவது அன்று துவங்கி இன்று வரை தொடர்கிறது. வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் கனவுத் தலமாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி தனது நிறுவனத்தில் 1837 புரொபேஷனரி அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
SBI
வயது: 01.04.2014 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதி செமஸ்டர் படிப்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு மையங்கள்: பாரத ஸ்டேட் வங்கியின் போட்டித் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.500/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.04.2014

இணையதள முகவரி: