October 21, 2021

பட்டதாரிகளுக்கு பாராளுமன்ற லோக்சபை செயலகத்தில் வேலை வாய்ப்பு

இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபை செயலகத்தில் தற்போது காலியாக உள்ள சுருக்கெழுத்தர், பணியாளர் வாகன ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
lok sabha
பணி: Stenographer (English/Hindi)

காலியிடங்கள்: 41

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம், இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200

பணி: Staff Car Driver (Ordinary Grade)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டுவதில் திறமையும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Joint Recruitment Cell, Room No: 521, Parliament House, Annexe, New Delhi – 110001.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.loksabha.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.