September 17, 2021

பசும்பாலுக்கு பதிலாக மூஸ் இன மான் பால்: ஐ.நா. சிபாரிசு!

உலக அளவில் பசும்பாலே அங்கிகரிக்கப்பட்ட பாலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ஒட்டகம், ஆடுகள், எருமைகள்,கழுதைகள், கலைமான்களின் பாலையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மற்றவைகளை விட பசும்பாலில் கொழுப்பு, புரோட்டீனுடன் லேக்டோஸ் என்ற சத்தும் உள்ளது. பசும்பால் தட்டுப்பாடு காரணமாக மற்ற விலங்குகளின் பாலை பயன்படுத்தலாம் என ஐ.நா., வின் உணவு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில் மூஸ் இன மான் மற்றும் கலைமான் பால் ஆகியவ்றை மாற்றாக பயன்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
nov 27 -health cow
மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த குளம்புள்ள ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடே (Cervidae) என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூஸ் அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூஸ், 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ.கி (kg) (1200 – 1600 பவுண்டு (lbs)) எடையும் உள்ள பெரிய விலங்காகும்.

இதற்கிடையில் பசும் பால் போன்றே இந்த மூஸ்’ இன மான் மற்றும் கலைமான் பால் பயன்படுத்தலாம் என ஐ.நா. சபையின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.அதில் அதிக அளவில் கொழுப்பு மற்றும் புரோட்டீன் சத்தும் உள்ளது. அத்துடன் பசும்பாலில் இருக்கும் ‘லேக்டோஸ்’ பாதி அளவு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளதால் பசும்பாலுக்கு நிகராக மூஸ் இன மான் பால் பயன்படுத்தலாம் எனவும் ஐ.நா. சபையின் உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Moose alternative to cow milk?
****************************************************
Milk from a variety of animals including camels, llamas and moose should be more widely used to counteract high cow milk prices due to growing demand for dairy in the developing world, the UN food agency said on Tuesday. “There is huge scope for developing other dairy species,” Anthony Bennett, livestock industry officer at the United Nations Food and Agriculture Organisation (FAO) in Rome, was quoted as saying in a statement.