October 18, 2021

நோஞ்சான் குழந்தைகள் : சிஏஜி அறிக்கையால் வாடி போன மோடி!

குஜராத் மாநில முதல்வரும், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் ,மாநிலத்தின் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் ( சிஏஜி) அறிக்கை.அதாவது
இம்மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் எடைகுறைந்து காணப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5 -wail less child 2
குஜராத் மாநிலத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுவதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் ஒன்றை அரசு உருவாக்கியது. இந்த திட்டத்தின் கீழ் 2 கோடியே 23 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் பயனாளிகளாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் சுமார் 63.37 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்றும், இதற்கு போதுமான அங்கன்வாடி மையங்களை அரசு அமைக்காததே காரணம் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தது 300 நாட்களாவதுபயனாளிகளாக கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 96 நாட்கள் மட்டுமே ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை எடை குறைந்த, ஊட்டச்சத்து குன்றிய குழந்தையாக காணப்படுகிறது.மாநிலம் முழுவதும் 75,480 அங்கன்வாடி மையங்கள் தேவையாக உள்ள நிலையில், 52,137 மையங்களுக்கு ( 69 சதவீதம்) மட்டுமே அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதிலும் 50,225 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

கூடுதல் மையங்கள் அமைக்க மத்திய அரசு தரப்பில் உதவிக்கரம் நீட்டப்பட்டபோதும், மாநில அரசு அதில் அக்கறை காண்பிக்கவில்லை என குற்றம்சாட்டும் சிஏஜி, அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து கூடுதல் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த 2008 ஆம் ஆண்டே மத்திய அரசு, குஜராத் மாநில அரசுக்கு கடிதம் எழுதியபோதிலும், குஜராத் அரசு அது தொடர்பாக எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை என மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் செயல்பாட்டில் உள்ள 40 சதவீத அங்கன்வாடி மையங்களிலும் அடிப்படை வசதிகளான கட்டடம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் சரிவர இல்லை என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Every Third Child in Gujarat Is Underweight: CAG
***************************************************************
The CAG has lambasted the working of the Integrated Child Development Scheme (ICDS) in Gujarat, which is aimed at fighting malnutrition among children, saying that every third child in the state is underweight.”Though there were 223.16 lakh eligible beneficiaries under Supplementary Nutrition (SN) programme under the Integrated Child Development Scheme (ICDS), 63.37 lakh beneficiaries were left out,” the CAG said in its report, which was tabled in the state Assembly yesterday.