September 25, 2021

நேபாளத்தில் மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் அமலாகிறது

240 ஆண்டுகளாக, மன்னராட்சி நடைமுறை அமலில் இருந்த நேபாளத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு, மன்னராட்சி அகற்றப்பட்டு, மக்களாட்சி நடந்து வருகிறது.இதையடுத்து, மதச் சார்பற்ற புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் நாடாளுமன்றத்தில் பெறப்பட்டது.
nepal sep 20
கடந்த 13-ந்தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, சாசனத்தின் ஒவ்வொரு பிரிவாக விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கை தொடங்கியது. 601 உறுப்பினர்களில், 507 பேர், புதிய அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் வழங்கினர்.இந்நிலையில், இந்த புதிய அரசியல் சாசனம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அந்நாட்டு அதிபர், ராம்பரன் யாதவ், இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் அனைவரும் ஒற்றுமையோடு ஒத்துழைப்பு தர கேட்டுக்கொண்டார்.

நாட்டில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்ந்து வந்தாலும், மதச்சாற்பற்ற நாடாக நேபாளம் இருக்கும் என்று புதிய அரசியல் சாசனம் கூறுகிறது.இந்த சாசனத்தின் அடிப்படையில் கூட்டாட் சியை அடிப்படையாக் கொண்டு நேபாளம் ஏழு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, புதிய எல்லைகள் வகுக்கப்படும். ஒட்டு மொத்த அதிகாரங்கள், மத்திய அரசின் வசம் இருந்தாலும், மற்ற அதிகாரங்கள், மாகாண அரசுகளுக்கு பிரித்து கொடுக்கப்படும். இதற்கான பணிகள் ஓராண்டில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து நாடான நேபாளத்தை, மதச் சார்பற்ற நாடாக அறிவிப்பதற்கு, இந்து ஆதரவு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.