September 27, 2021

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒளி தேர்வு!

நேபாளத்தில் புதிய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும், இந்தியாவுக்கான வர்த்தக முனையங்களில் முற்றுகைகளும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இதை முடிவுக்கு கொண்டு வர அனைத்து கட்சிகளும் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியை தழுவியதால் பிரதமர் சுசில் கொய்ரலா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
nepal oct 11
இந்த நிலையில் புதிய பிரதமரை நேபாள பாராளுமன்றம் இன்று தேர்ந்தெடுத்தது. (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் கே.பி. சர்மா ஒளி நேபாளத்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 598 வாக்குகளில் 338 வாக்குகள் சர்மா ஒளிக்கு ஆதரவாக பதிவானது. பாராளுமன்றத்தில் 12 உறுப்பினர்களை தன்னிடம் கொண்டுள்ள மாதேஷ் ஜன் அதிகார் பேரவை லோக்தன்திரிக் கட்சி சர்மா ஒளிக்கு ஆதரவை அளித்துள்ளது.