September 20, 2021

நேதாஜி பற்றிய ஆவணங்கள் 18 ஆம் தேதி வெளியீடு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

நேதாஜி பற்றிய 64 ஆவணங்கள் வரும் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறி மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். பல்வேறு சூழ்நிலைகளில் பலரும் கேட்ட போது அண்டைநாடுகளுடனான நட்புறவு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு நேதாஜி தொடர்பான கோப்புகளை தொடர்ந்து வெளியிட மறுத்து வரும் நிலையில், மம்தா பானர்ஜி இப்போது இப்படி அதிரடியாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது.
netaji note
சுதந்திர போராட்டத்தின்போது, 1939–ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து மற்றொரு பிரபல தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விலகினார். பின்னர் அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார்.

நேதாஜி, 1945–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18–ந் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. எனினும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. இந்த விமான விபத்து சம்பவத்துக்கு பின்பு, நேதாஜி முந்தைய சோவியத் ரஷியா நாட்டில் காணப்பட்டதாகவும் கூறப் படுவது உண்டு. இதனால் நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை அண்மைக்காலம் வரை நீடித்தது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை பற்றிய 100–க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்க மாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. எனினும், இவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்கள் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இந்த தகவலை மாநில தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த போது மம்தா பானர்ஜி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “நேதாஜி தொடர்பாக எங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் நாங்கள் வெளியிட முடிவு செய்துள்ளோம். இவைகளை கணினிமயமாக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது. ஆவணங்கள் அனைத்தும் 18-ம் வெளியிடப்படும்” என்றார்.