September 25, 2021

நெஸ்ட்லே இந்தியாவின் பங்குகள் வீழ்ச்சி!

நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் பற்றிய சமீபகால சர்ச்சை காரணமாக கடைகளில் அதன் விற்பனையை நிறுத்தி வைக்குமாறு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், அரியானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மேகி நூடுல்சை பரிசோதனை கூடங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளன.அந்த ஆய்வறிக்கை வந்த பிறகு மேகி நூடுல்ஸ் மீதான முடிவை வெளியிட இம்மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.
nesle share
இதற்கிடையே டெல்லியில் பல இடங்களில் மேகி நூடுல்ஸ் மாதிரி சேகரிக்கப்பட்டது. அவற்றை ஆய்வு செய்த போது மேகி நூடுல்ஸ் அதிக ரசாயனத் தன்மை கொண்டிருப்பதால் சாப்பிட உகந்தது அல்ல என்று தெரிய வந்தது.இதைத் தொடர்ந்து மேகி நூடுல்சை தயாரிக்கும் நெஸ்ட்லே நிறுவனம் மீது வழக்கு தொடர டெல்லி மாநில அரசு முடிவு செய்துள் ளது

இன்று டெல்லியில் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களை நெஸ்ட்லே நிறுவன அதிகாரிகள் சந்தித்து பேசினர் கூட்டத்தில் மேகி நூடுல்சில் சேர்க்கப்படும் ரசாயன பொருள் பற்றி விரிவான விவாதம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மேகி நூடுல்சுக்கு டெல்லியிலும் தடை விதிக்கபட்டது.

இப்படி மேகி நூடுல்சுக்கு பலவேறு மாநிலங்களில் தடை விதிக்கபடுவதை தொடர்ந்தும் நெஸ்ட்லே பால் பவுடரில் புழுக்கள் இருந்த பிரச்னை பூதாகரமாகி வருவதாலும் நேற்று முதல் ராணுவ வீரர்கள் மேகி நூடுல்ஸ் சாப்பிடவேண்டாம் என்று வீரர்களை ராணுவம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், ராணுவ கேண்டீன்களில் மேகி நூடுல்ஸை அடுத்த உத்தரவு வரும் வரை விற்பனை செய்யக்கூடாது என்றும் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை மேற்கண்ட உத்தரவை ராணுவம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் நாட்டில் உள்ள ஆயிரம் ராணுவ கேண்டீன்களில் நூடுல்ஸின் விற்பனை நிறுத்தப்படும் என்பதால் நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று ராணுவம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நெஸ்ட்லே இந்தியாவின் பங்குகள் 10 சதவீதம் விழ்ச்சி அடைந்து உள்ளது.