நூடுல்ஸை தொடர்ந்து நெஸ்ட்லே குழந்தை பால் பவுடரில் புழுக்கள் புகார்!கோவையில் பகீர்

பிரபல, “நெஸ்ட்லே’ நிறுவனம், பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் நெஸ்ட்லே இந்தியா, அமிதாப் பச்சன், ப்ரீத்தி ஜிந்தா உட்பட 8 பேர் மீது உத்தரப்பிரதேச கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கோவையில் நெஸ்லே நிறுவனத்தின் குழந்தைகள் பால்பவுடரில் புழு இருந்ததாக புகார் எழுந்து உள்ளது.
food jun 2
கோவை புளியகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் டாக்சி டிரைவர் இவர் 380 கிராம் நெஸ்லே நான் புரோ 3 கர்டான் (Nestle NAN PRO 3 carton) பால்பவுடரை தனது குழந்தைகளுக்காக வாங்கினார். 2 நாட்களுக்கு பிறகு பால் குடித்த குழந்தைக்கு தோல் ஒவ்வாமை ஏற்பட்டு உள்ளது. உடனடியாக குழந்தையை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்.

உடனடியாக நெஸ்லே கஸ்டமர் சபோர்ர்ட்டில் வாய்ஸ் சிஸ்டம் மூலம் புகார் கொடுத்து உள்ளார். உடனடியாக நிறுவனத்தின் லோக்கல் ஏரியா மேலாளர் ஜி.கிருஷ்ணபெருமாள் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினார். அப்ப்போது உடனடியாக கிருஷ்ணபெருமாள் அந்த பால் பவுடருக்கு பதிலாக வேறு பொருளை வழங்குவதாக் கூறினார்.ஆனால் இதற்கு டாக்சி டிரைவர் பிரேம் ஆனந்த் ஒத்து கொள்ளவில்லை. அந்நிறுவனத்தின் பிரதிநிதி பால்பவுடரை ஆய்வு கூடத்தில் சோதனை செய்து சான்றிதழ் வழங்குகிறோம் என உறுதி அளித்தார்.

ஆனால் பிரேம் ஆனந்த் அதை ஏற்று கொள்ளவில்லை.இதில் சமாதனம் அடையவும் இல்லை. நெஸ்லே பிரச்சினை குறித்து ஒரு பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளும் வேண்டும் என கூறினார். இதற்கிடையில் கோவை உணவு பகுப்பாய்வு ஆய்வகம் 380 கிராம் பால்பவுடர் மாதிரியில் 28 புழுக்கள் 22 அரிசி அந்துப்பூச்சிகள் இருப்பதி உறுதி செய்தது.

ஏப்ரல் 29 ந்தேதி பிரேம் ஆனந்த் தமிழ்நாடு உண்வு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகதுறை ( உணவுபாதுகாப்பு பிரிவு) யை அணுகி பால்பவுடர் மாதிரிகளை சோதனை செய்ய கேட்டு கொண்டார். இதை ஆய்வு செய்த உணவு ஆய்வாளர் தனது அறிக்கையை கொடுத்து உள்ளார். இந்த மாதிரி பால்பவுடர் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் படி இல்லை எனவும் அதில் உயிர் உள்ள பூச்சிகள் அதில் இருந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன் நெஸ்லே தயாரிப்பு பாதுகாப்பனது அல்ல உணவு பாதுகாப்பு அதிகாரி அறிக்கை கொடுத்து உள்ளார். இதை தொடர்ந்து பிரேம் ஆனந்த் உணவு பாதுகாப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளாராம்.