September 25, 2021

நிலா அது வானத்து மேலே..’பலானது’அதுக்கும் மேலே! – வின்வெளியில் அரங்கேறப் போகும் அந்தரங்கம்! (A)

திரிசங்கு மகாராஜாவுக்காக விசுவாமித்திர முனிவர் தமது தவ வலிமையால், சொர்க்கத்துக்கும் பூமிக்கும் இடையே தனி சொர்க்கத்தை சிருஷ்டிக்க, அது திரிசங்கு சொர்க்கம் என்று பெயர் பெற்றது என்பது புராணக் கதை. ஆனால் அது போன்ற சொர்க்கத்தை இன்றைய விஞ்ஞானிகள் பூமிக்கு மேலே மெய்யாலுமே சிருஷ்டிக்க முயன்று வருகிறார்கள். அதன் ஒரு முயற்சியாக முதன் முதலாக வின்வெளிக்கு ஒரு ஜோடியை அனுப்பி செக்ஸ் உறவு மேற்கொள்ள வைக்க திட்டமிடுகிறார்கள்.
edit sex jun 11
வின்வெளியில் எதுவும் நிலையாக ஓரிடத்தில் இருக்க முடியாது. வின்வெளி வீரர்கள் பல்வேறு பிரபஞ்சங்களை காண நேரிடுவதால் பல தடவை சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் காண்பார்கள். ஆகவே அவர்களின் பகலும் இரவும் நமக்கு உள்ளதைப் போல இருப்பதில்லை. வின்வெளி வீரர்களின் தூக்கம், பணி நேரம் முதலியன முன்னரே கீழே கட்டுப்பாட்டுக் கேந்திரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றன. வின்வெளி வீரர்கள் வானில் நல்ல வேகத்தில் பூமியைச் சுற்றுவதை உணரமாட்டார்கள். நிலையாக ஓரிடத்தில் இருப்பது போலவே அவர்களுக்குத் தோன்றும். அதே நேரத்தில் அவர்களால் பூமி தனது அச்சில் சுழல்வதைக் காண இயலும். மேலும் வின்வெளியில் மேல் கீழ் என்பது கிடையாது

விண்வெளி என்பது பொதுவில் மனிதன் வாழ லாயக்கற்ற பிரதேசம். சர்வதேச விண்வெளி நிலையம் பறக்கின்ற உயரத்தில் ‘எடையற்ற நிலை’ தோன்றும். ஈர்ப்பு சக்தி என்பது அனேகமாக இராது. கையில் பிடித்துள்ள தம்ளரை விட்டால் அப்படியே அந்தரத்தில் நிற்கும். அல்லது இஷ்டத்துக்கு எந்தப் பக்கம் வேண்டுமானாலும் நகரும். மேல் கீழ் என்பதே இராது.

மேலும் படுக்கையில் படுக்க முடியாது. கொஞ்ச நேரத்தில் அந்தரத்தில் மிதப்பார்கள். விண்கல சுவரில் கோணிப்பை போல ஒரு பையைத் தொங்க விட்டு அதனுள் நுழைந்து கொண்டு உறங்கலாம். கஷ்டமாக இராது. ஈர்ப்பு சக்தி அனேகமாக இராது என்பதால் அன்றாட வேலைகளில் எண்ணற்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.வின்வெளியில் உள்ள நிலைமைகள் உடலை பல வகைகளில் பாதிக்கும். கால்களுக்கு வேலை இல்லை என்பதால் அவை சூம்பிப் போனவை போல ஆகிவிடும். புஜங்களும் மார்புப் பகுதியும் பெருத்து விடும். உயரம் சில செண்டிமீட்டர் அதிகரிக்கும். பூமிக்குத் திரும்பியவுடன் கால்களை ஊன்றி நிற்க இயலாது.

இந்த நிலையில்தான், வின்வெளியிலேயே அவர்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இதுவரை வின்வெளியில் யாரும் செக்ஸ் வைத்து கொள்ளவில்லை என்பதால் வின்வெளி வீரர்களை கொண்டு இந்த அதி முக்கியமன ஆராய்ச்சியில் வின்வெளி நிலையம் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது.

பார்ன்ஹப் என்ற பட நிறுவனம் ஒன்றுதான் வின்வெளியில் வைத்து பலான படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டு உள்ளது. பூமியின் கீழ் சுற்றுவட்டபாதையில் இந்த படம் எடுக்கப்பட போகிறது. அதிலும் மனிதன் வின்வெளியில் செக்ஸ் வைத்து கொள்ளுவது தொடர்பான செக்ஸ் எக்ஸ்பிரிமெண்டாக இது கருதப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அநேகமாக 2016 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று நம்பப் படுகிறது.
space sex 1
பார்ன்ஹப் இணையதளத்தை ஆண்டு தோறும் 16 கோடி வாடிகையாளர்கள் பார்க்கிறார்கள். இந்த படத்திற்கு அதிக முதலீடு வேண்டும் என்பதால் இந்த முதலீடை தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. அதிக நிதி முதலீடு செய்வோருக்கு பரிசு வழங்கவும் இந்த இணையதளம் திட்டமிட்டு உள்ளது.இந்த ஆபாச பட தயாரிப்பு செலவில் 60 சதவீதம் வின்வெளி அழைத்து செல்லும் விமான செலவு ஆகும். இந்த படத்தில் பங்கு பெறும் நடிகர்-நடிகை மற்றும் குழுவினருக்கு ஆகும் செலவு 2 சதவீதம் தான்.

இந்த வின் வெளி செக்ஸ் எக்ஸ்பிரிமெண்ட் படத்திற்கு ஆபாச பட நடிகை ஈவா லோவியா, ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் இவர்களுக்கு 6 மாதம் தீவிர பயிற்சி அளிக்கப்படும்.

வின்வெளி வாழ்க்கை என்ன என்பது குறித்து பல கூறுகள் உள்ளன அந்த ஆராய்ச்சியை கவனமாக கருத்தில் கொண்டு குறிப்பாக செக்ஸ் குறித்து செயல்படுத்தப்படும். எனினும் புவி ஈர்ப்பு விசைமில்லாத இடத்தில் உடலுறவு என்பது சாத்தியமே என கருதப்படுகிறது. ஆக்கிரமிப்புக்காக செயற்கைகோள் மற்றும் கிரகங்களில் இனபெருக்கம் எனபது முக்கியமாக உள்ளது. ஆனால் இது ஒரு மிகப்பெரிய இலக்கு தான், ஆனால் அது அடைய ஒரு வாய்ப்பு இருக்கிறது. என அந்த இணைய தளம் தெரிவித்து உள்ளது.