October 19, 2021

நிலக்கரி ஊழலில் பிரதமரே பர்ஸ்ட் அக்யூஸ்ட :முன்னாள் செயலர் பரபரப்பு குற்றச்சாட்டு!

சிபிஐ செவ்வாய்க்கிழமை பதிவு செய்துள்ள புதிய முதல் தகவல் அறிக்கையில், பிரகாஷ் சந்திர பரக்கின் பெயரும் இடம்பெற்றுள்ள நிலையில் “இந்த சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிபிஐ குற்றவாளிகளை கண்டுபிடிக்குமானால், அதில் பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்று நிலக்கரித் துறை செயலாளராக இருந்த பிரகாஷ் சந்திர பரக் தெரிவித்துள்ளார்.நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐ ஒரு வேளை இறுதி கட்டத்தை அடைந்தால், அதில் நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்றும பிரகாஷ் கூறியுள்ளார்.
16 - Colgate-manmohan
இது தொடர்பாக அவர் தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,” நிலக்கரித்துறையை தன் வசம் வைத்திருந்த பிரதமர்தான் முதல் குற்றவாளி, நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் அனைத்து முடிவுகளும் அவர்தான் எடுத்தார்.இதில் தொழிலதிபர் பிர்லாவின் இரு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது அவரது முடிவு. இதில் என்னை மட்டுமே குற்றவாளியாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. நான் குற்றவாளி என்றால் பிரதமரும் குற்றவாளிதான்” என்று கூறியுள்ளார்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பாக நேற்று, நிலக்கரி துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் மற்றும் ‘ஆதித்ய பிர்லா’ குரூப் நிறுவனங்களின் தலைவர், குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் மீது சிபிஐ, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அத்துடன் பரேக் மற்றும் குமார் மங்கலம் பிர்லா ஆகியோருக்கு சொந்தமான, மும்பை, டெல்லி, ஹைதராபாத், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் உள்ள இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனையும் நடத்தினர்.

இந்நிலையில் தொழிலதிபர் பிர்லாவுக்கு சாதகமாக , பி.சி. பரேக் நடந்து கொண்டதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது. விரைவில், விசாரணைக்கு ஆஜராகும்படி, பிர்லாவுக்கும், பரேக்கிற்கும், சம்மன் அனுப்ப சி.பி.ஐ திட்டமிட்டுள்ள நிலையிலேயே பரேக் மேற்கூறிய குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

இதனிடையே பிரதமர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது; தவறானது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். ஆனால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த விஷயத்தில் பிரதமருக்கும் பொறுப்பு இருக்கிறது என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

PM should be the first accused in Coalgate scam: PC Parekh after CBI booked him
******************************************************************
After CBI filled another FIR against industrialist Kumar Mangalam Birla and Former Coal Secretary PC Parekh in the infamous Coal Allocation Scam, Parekh said that if he is one of the accused, then Prime Minister Manmohan Singh should be the first accused in the case. He further said that there is nothing wrong in the allocation of blocks, but if CBI sees anything wrong with the same and the case goes to the Supreme Court, I would accept it as much as the responsibility of the PM.